பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணயிலாக் காதலன்.

எண்ணம் உள்ளம எல்லாம் நிறைந்து
தண்ணளி நோக்குடன் சலியா தென்னை
அல்லும் பகலும் அனைத்திடக் காத்துள
எல்லையே இல்லாக் காதலன் அறிதிகொல்?
பிழையிற் பிரியான் பேதமை முனியான்
அழகிலும் இளமை யழைப்பிலும் முதுமை
அனைத்திலும் காதல் அணுவும் குறையான்
தினைத்துணை வெறுப்போ திரிந்தவோர் நோக்கோ
சுடுகற் குறிப்போ சோர்வோ இல்லான்
மிடிமையாம் இருளிலும் மிகுவளப் பொலிவிலும்
பிணியின் துயரிிலும் பெருநலக் களிப்பிலும்
குணத்திலும் கீழ்மைக் குழியிலும் தவருன்
புடஅனல் வாழ்வினில் மருகிடும் பொழுதெலாம்
திடநனி பெற்றுக் கருத்தினில் தெளிவாய்
உருவம் நிறைந்தே வருவான் அவனே
ஒருதனி யண்ணல் உவமையொன் றில்லான்

311 -