பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறைந்த ஜோதி

காற்றுத் திசையினிலே

 காதோடே போகாமல்

வாழ்க்கையிலே நல்லொளியாய்

 வழிகாட்ட முன்னடவீர் ; 

ஏழ்மையிலும் தாழ்மையிலும்

 இன்பமிகுங் காலத்தும்

எக்காலும் கைக்கொள்வீர்

 எங்கும் பரப்பிடுவீர்.

அறிவால் வளர்ந்தோங்கி

 அணுவைப் படையாக்கும்

திறமாம் செருக்கினிலே

 அன்புள்ளம் சிறுத்திட்ட

அவனிதான் அழியாமல்

 அவன் வாக்கே காத்திடுமால்;

புவிமீதிற் சமத்துவ நற்

 புதுவாழ்வை நாட்டிடுமால்;

எண்ணத்திற் காந்தி மகான்

 என்றும் மறையாமல் திண்ணமாய்க் காத்திடவே
 சேர்ந்திடுவீர் சோதரரே.
 அன்பென்று பேசியங்கே அன்ருெருவர் வந்திருந்தார்அன்பு பேசிவந்தவர் இயேசுகிறிஸ்து.
 நூற்றிருபத்தைக்தெனினும் - காங்தியடிகள் தாம் நூற் நிருபத்தைந்து ஆண்டுகள் வாழப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தார். நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்வதாகவும் அவர் கூறியதுண்டு.
             50