பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிக்கனல்


கானப் பைம்மரப் பேச்சினில்-இளங்
           கன்னிப் பேரெழில் வீச்சினில்
 மோனப் பேரொலி தன்னிலே-நன்கு
         மூட்டுவேன் கவிக் கனலையே.


வானப்பூக்கள்-வானிலே மின்னுகின்ற மீன்கள்.
   சிறு காகத் திரையினில்-காகப்பாம்பு சீறிப் படமெடுத்து எழுகின்றதுபோல ஒலித்துச் சுருண்டு எழுகின்ற அலையில். மோனப் பேரொலி-பேச்சும், ஒலியும் சாதிக்க முடியாததைப் பல சமயங்களில் மெளனம் சாதித்துவிடும். ஆகவே அந்த மோனத்தின் குரல் பேரொலியைவிடச் சிறந்ததாகும்.