பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சத்தியம்

சத்தியம் செத்ததோ

 தர்மம் ஒளி மங்கிற்றோ? சத்தியத்தைக் கடைப் பிடித்தார்
 காந்தியெனல் சரியல்ல சத்தியமே காத்திமகான்
 சத்தியமே அவர் வாழ்க்கை சத்தியமே அவர் வடிவம்
 தரணிக்கோர் புதுச்சோதி பித்தனொரு பேதையினல்
 பிணமாகச் சாய்ந்தவுடன் சத்தியம் செத்ததோ
 தர்மம் ஒளி மங்கிற்றோ? எத்தனையோ துன்பங்கள்
 எத்தனையோ சிறைக் கூடம் இத்தேச விடுதலைக்காய்
 எமதண்ணல் தாம் சகித்தார் தாய் நாட்டின் பக்தியிலே
 தலை சிறந்தார் என்றாலும் தாய்நாடோ சத்தியமோ
 சத்தியமோ தாய்நாடோ எதுவேண்டும் எனக்கேட்டால்
 இமைப்போதும் தயங்காமல் சத்தியமே வேண்டு மென்பார் 
 சாந்தமுனி காந்திமகான் வையத்தே அன்பாட்சி
 வளர்க்கவந்த மெய்ஞானி
             64