பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சத்தியம்

மார்பகத்தே குருதி சிந்த
            மறைந்திட்டார் என்று சொன்னால்
 சத்தியம் செத்ததோ
      தர்மம் ஒளி மங்கிற்றோ?
 இத்தரணி யென்னாளும்
       ஈடேறி உய்யாதோ ?
 சத்தியந்தான் வெல்லாதோ
       தர்மநெறி ஓங்காதோ ?
 என்று மனம் சோர்ந்தேன்
       இருள்கூடி நெஞ்சுடைந்தேன்.
 அத்தப் பொழுதினிலே
      அகக் கண்ணின் முன்பாக
 உன்னதமாம் லட்சியத்திற்
      குயிரீந்த மேலோரின்
 மன்னுபுகழ் வடிவெல்லாம்
      வந்தனவே ஒளிமயமாய் :
 எல்லோர்க்கும் நடுநிலையாய்
      இயேசுமுனி அன்புருவம்
 கல்லும் கரைந்துருகும்.
      கருணை ஒளி கண்டிட்டேன் :
 அன்பென்று பேசி வந்த
      அவர் நெஞ்சில் ஆணியிட்டுத்
 துன்மதியோர் கொன்றிட்டார்
      தூயமகான் மறைந்தாரோ
 ஏசுமுனி மாய்ந்தாரோ
      இல்லை யில்லை நாமறிவோம்

                       65