பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நினைவு அலைகள்

கெஞ்சிலே ஆயிரம் ஆயிரம் நினைப்புக்கள்,எண்ணங்கள் ஆசைகள் எழுந்து சதா ஆலை மோதுகின்றன.ஆனால் இருபதாம் வயதிலே, இளமையிலே அவற்றின போக்கே வேறு; ஐம்பதாம் வயதிலே, முதுமை எய்துகின்ற காலத்திலே ஆவற்றின் போக்கே,வேறு எல்லோருக்கும் அல்ல - பெரும்பா லோருக்கு.

இருபதில் :

மண்ணிலே உயர் தேவநல்

                   லின்பத்தை

வளரச் செய்துநான் யார்க்கும்

                வழங்குவேன்!

விண்ணிலே அந்தத் தாரகைக்

                    கூட்டத்தில்
 வீடமைத்துப் புதுஉல 
                  காக்குவேன்;

கண்ணிலே ஒளி காட்டும்

                     அழகியர்
 காதல் என்றிடில் சாதலுக் 
                   கஞ்சிடேன்;

தண்ணென் மாமதி தன்னைப்

                    பிழிந்துமே
 சாறெடுத்துமின் தங்கமும் 
                பண்ணுவேன்.

மாந்த யாவரும் ஒர்நிலை

                    தன்னிலே
 வாழும் இன்பச் சமூகத்தை 
                  நாட்டுவேன்;

சாந்தி அன்பறம் எங்கும்

                   தழைத்திடத்
 தளர்விலா துழைத் தேஜயங் 
                  கூட்டுவேன்;

கூந்தல் நீண்ட இளங்கொடி

                     மேனியர்
 கூறிடிற்கடலேழும் 
                 சுருட்டுவேன்;

காந்த மின்பொறி ஞான

                  மனத்தையும்
 கண்டுழைப்புச் சலிப்பை 
               வெருட்டுவேன்.
             88