பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அறிவு தெளிந்தேன்


எண்ணம் வானில் எழுந்து பறந்திட

  எண்ணிலாமனக் கோட்டைகள் 
  கட்டினும், 

கண்ணைத் தைத்துச் சிறகைத் துணித்திட்ட

   கருடன் போலச் செயலின்றி 
   நின்றனன் ; 

மண்ணேர் இன்பநல் வீடென மாறவும்,

   வாழ்க்கை இன்னிசைக் 
   கீதமாய்ப் பாயவும் 

பண்ண ஆவிதுடிக்கின்றதாயினும்

   பாதை காணத் திறனில்லை 
   என் செய்வேன்.


என்றுநானும்வருத்திஇருக்கையில்

  எங்கிருந்தோ அவன் 
  வந்துமுன் தோன்றினன்; 

நின்ற தோற்றமும் நீள்விழிப் பார்வையில்

   நிலவு சாந்தியின் பேரொளிக் 
   கூட்டமும், 

மன்று ளாடிய மாதவன் வேடமும்,

   வாகை சூடிடும் வெற்றி 
   முறுவலும்

நன்றென் உள்ளம் கவரப் பணிந்தென்றன்

    நலிவு கூறி அறிவுரை 
    நாடினேன்


உள்ளத் தேகனல் விட்டெழும் ஆர்வமும் உறுதி யும்மிகுந் தாலவை போதுமால்; வெள்ளிமாமலை தன்னையும் தூக்கலாம்; விண்ணை இங்கு கொணரவும் செய்யலாம்;


             92