பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரன் வழிநடைப் பாட்ரு

ஜேய் ஹிந்த் ஜேய் ஹிந்த்

 ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய் ஹிந்த் ஜேய் ஹிந்த் 
 ஜெய ஜெயஜேய் ஹிந்த்-ஜேய்ஹிந்த் பாரத வீரா!
 தோளினைப் புடைப்பாய் பாரெலாம் அதிர்ந்திடக் 
 கோஷமிட்டெழுவாய் !-ஜேய் 
                       ஹிந்த்

உன் திறல் காட்டிட

 உலகெலாம் நடுங்கிட

வந்தது பெரும்போர்

 வாழ்கெனப் பாடுவாய்-ஜேய் 
                       ஹிந்த்

சண்டையின் குமுறல்

 சிந்தையின் அமுதம்

அண்டம் பிளந்திட

 ஆர்ப்பரித் தோதுவாய்-ஜேய் 
                       ஹிந்த்

தாய் புகழ் ஓங்கிட

 வீறுகொண் டெழுவாய்

பாய் புலி போலே

 சீறிமுன் செல்வாய் !-ஜேய் 
                       ஹிந்த்
            101