15
பண்டு, மலையாளக் கரை ஒன்றிலேயே ஏலம், மிளகு கிராம்பு, சாதிக்காய் சாதிபத்திரி ஆகிய சாதிபத்திரி ஆகிய மணச் சுவைப் பொருள்கள் பேரளவில் விளைவிக்கப்பட்டன. தென்னாட்டுக்குப் பெருமையும் பெருஞ்செல்வமும் தரக் காரணமாயிருந்த்து அதன் பழய மிளகு வாணிகமே யாகும். இன்றும் கிழக் கிந்தியத் தீவுகளுடன் அத்துறையில் உலக வாணிகத்துக்குத் தென்னாடே மூலதளமாக இயங்குகிறது.
தென்னாட்டின் பேராறுகளும், சிற்றாறுகளும், அவற்றிலிருந்து செயற்கையாக வகுக்கப்பட்ட அணைகள், கால் வாய்கள், நீர்த்தேக்கங்கள், நீர் மின்சாரத் திட்டங்கள் ஆகியவையும், வேளாண்மை, தொழில் ஆக்கம், நீர்ப்போக்குவரத்து, வாணிகம் ஆகிய பலவேறு வாழ்க்கைத் துறைகளுக்குப் பயன்படுகின்றன. சென்னை, பெங்களூர், கோயமுத்தூர், மதுரை போன்ற மாநகரங்களுக்கு நீர மின்சாரத் திட்டங்களே ஒளிவிளக்கமும் இயந்திர ஆற்றலும் தருகின்றன. நீர் மின்சாரச் சேமவைப்பீட்டில் தென்னாடு அமெரிக்காவுடன் இணையான மதிப்புடையது.
வானமழையை ஏரிகளாகத் தேக்கியும், அணைகள் கால் வாய்களாக வகுத்தும் வான் தரு வளத்துடன் கோல் தரும் வளத்தையும் முதன் முதல் பெருக்கும் வகை கண்டவர்கள் தமிழரே.
தென்னாடு இயற்கை வளங்கள் வாய்ந்ததாகவும், அத னுடன் செயற்கை வளங்களுக்கான வாய்ப்பு நிறைந்ததாகவும் விளங்குகிறது.
மொழிவழியே இனம்
நில இயல் முறைப்படி தென்னாட்டின் வட எல்லை விந்திய மலை என்று மேலே குறித்தோம். ஆனால், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தென்னாட்டு மக்கள் சிந்து கங்கை சமவெளிகளிலும் பரந்து பல நாடு நகர்களை அமைத்து வாழ்ந்தனர். தென்னாட்டுப் பழங்குடி இனத்தவர் இச்சம வெளிகளில் பல அயலினங்களுடன் கலந்து மாறுபட்டனராயினும். மலைப் பகுதிகளில் வடமேற்கிலும், வடக்கிலும், வடகிழக்கிலும் நடுமேட்டு நிலங்களிலும் பழங்குடி