பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்ககாலப் போர்கள் - 2 79 செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தி, அவன் யானைகளின் உதவி கொண்டே அதனைத் தன் நாட்டுக்கு இழுத்து வந்தான். அத் துடன் அதைக் கட்டி இழுப்பதற்கு அவன் பழையன் குடும்பத் துப் பெண்டிரின் கூந்தல்களையே அறுத்து வடமாகத் திரித்துப் பயன்படுத்தினான் என்று அறிகிறோம். மோகூர்ப் போரில் பழையனுக்குச் சில வேந்தரும் பல வேளிரும் துணை நின்ற தாகத் தெரிகிறது. தமிழர் வீரத்தோடு கலந்த கறையாகக் கடும்போட்டி உணர்ச்சியும் கொடுமையும் இடம்பெற்று இருந்தன என் பதை இது ஒளிவு மறைவின்றிக் காட்டுகிறது. கொங்கர் செங்களம் நெடுமிடலை அடக்கிய சேரன் செங்குட்டுவன் முன்னோன் இருதிசைக் கடலிலும் நீராடித் தமிழகத்தின் வடதிசை முழு வதும் ஆட்கொண்டிருந்தான். ஆயினும் கொங்கு வெற்றி முழுதும் உறுதியாய் விடவில்லை. கொங்கு நாட்டில் எழுந்த கிளர்ச்சிகளைச் செங்குட்டுவன் செங்களம் என்ற இடத்தில் போர் செய்து அடக்கவேண்டிவந்தது. இதில் சோழர் பாண்டி யர் கொங்கருக்கு உதவிளர் என்று தோற்றுகிறது, "நும்போல் வேந்தர் நும்மோடு இகலிக் கொங்கர் செங்களத்துச் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தனராயினும், ஆங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன” (சிலப்பதிகாரம் XXV 152-155) என்று சிலப்பதிகாரத்தில் வில்லவன் கூற்றாக இதை இளங்கோ அறிவிக்கிறார். இடும்பில், வியலூர், கொடுகூர் வெற்றிகள் செங்குட்டுவன் உள்நாட்டுப்பெரு வெற்றிகளில் கொங்கு நாட்டுப் போருக்கு அடுத்தபடி இடும்பில் கைக் கொண்டதும், வியலூர் கொடுகூர் அழித்ததும் முக்கியமானவை ஆகும். இடும்பில் என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள இடும்பா வனம் என்று உரையாசிரியர் அடியார்க்குநல்லார் குறிக் கிறார். மாறா வல்வில் இடும்பில் புறத்திருத்து' (பதிற். 5பதிகம்) என்று பதிற்றுப் பத்தும், 'கொடுந்தேர்த்தானையோடு இடும்பில் புறத்திறுத்து (சிலப் XXviii 118) என்று சிலப்பதிகாரமும் இதனைக் குறிப்பிடுகின்றன.