பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

காட்சிகள் மாறின.

அன்னை பாரததேவி சுதந்திரதேவி ஆனாள்.

அண்ணல் காந்தியடிகள் வாழ்த்திய தொண்டர் காமராஜ், விடுதலை வீரர் காமராஜ், சமுதாய நலச் சேவகர் காமராஜ், இன்று தொண்டர்களின் தொண்டராகவும், தொண்டர்களின் பண்புடைத் தலைமையாளராகவும் காட்சி தருகின்றார். ‘அமரருள் உய்க்கும் அடக்கம்’ அவர் சின்னம்! தமிழ்ப் பண்பாட்டின் சீலம் நிறைந்த காவலர்!

இரத்தத்தோடு இரத்தமாக ஊறிவிட்ட தியாக நலப் பண்பு, நாட்டுப்பற்று, தன்னலமற்ற சேவை, ஆழ்ந்த மனிதாபிமானம், உலக அறிவு, பரந்த அரசியல் விவேகம், உணர்ச்சித் துடிப்பு, விரிந்த உள்ளம், சாந்தம், அறப்பண்பு, எளிமை, தூய்மை, ஈரம், அன்பு, நேசப் பரிவர்த்தனை போன்ற குணங்களுக்கு ஒருருவமாகத் திகழும் மேதை காமராஜ். ‘முறை செய்து’ காப்பாற்றும் அவர் ‘மக்கட்கு இறை’யாகப் பரிமளிப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்?

திரு காமராஜ் ஓர் ஆச்சரியக் குறி!

பதவி மோகம் விளையாடும் இப் பூவுலகிலே, பதவியைத்துறந்த ஓர் உதாரண புருஷர் அவர். ‘காமராஜ் திட்டம்’ வரலாற்றுச் சிறப்புக்கொண்ட சேதி!...

1963 நவம்பர் 3-ல் நேருஜி சொன்னர்:

“காங்கிரஸ் அக்கிராசனர் பதவிக்குக் காமராஜ்தான் மிக மிகத் தகுதி வாய்ந்தவர். சென்னையில் அவர் செய்த நற்பணிகள்பற்றி எல்லோருக்கும் தெரியும். காங்கிரஸ்