பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நேருஜியின் உலகம் சுற்றுகிறது!

சோவியத் அரசாங்கம் மத்திய பசிபிக் மகா சமுத்திரத்தில் ஐம்பது மெகாடன் ராட்சஸ அணுகுண்டை வெடித்துச் சோதனைகள் செய்து பார்த்ததாகச் செய்திகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகள் ருஷ்யாவின் இந்த அதிசயத் திருவிளையாடலைக் கண்டு மனம் குழம்பி வருவதை எல்லா நாளிதழ்களும் சொல்லி வருகின்றன, இப்படிப்பட்ட விண்முட்டும் விந்தைச் செயல்களைக் கண்டு நம் பாரதப் பிரதமர் அதிர்ச்சி அடைந்தார். எனவே, “ஐந்து கோடி டன் அணுகுண்டு வெடிப்பது போன்ற காட்சிகளை நடத்துவது பெரிய நாடுகளின் அந்தஸ்துக்குப் பொருத்தமான தல்ல,” என்று எச்சரித்திருக்கின்றார். அணு குண்டுச் சோதனைகளை அடியோடு தடை செய்யக்கூடிய ஏதாவது ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய தன் அவசியத்தையும் வற்புறுத்தியிருக்கிறார். அத்துடன், இந்தியாவாலும் அணுகுண்டு உற்பத்தி செய்ய முடியமென்று சவால் விடவும் நேருஜி தவறவில்லை!

உலகம் போற்றும் உத்தமத் தலைவர் நேருஜியின் உலகம், அன்பு-சமாதானம் ஆகிய காந்தீயக் கொள்கைகளினால் ஊட்டம் பெற்று, வலுவடைந்து, விரிவு பெற்றிருக்கிறது. இதே நேரத்தில், தமிழகத்தைப் பொறுத்தமட்டிலே நேரு பிரானின் பணிகள் எந்த அமைப்பில் நடைபெற்றிருக்கின்றன, அவை பொது மக்கள் மனத்தில் எவ்வகையில் பதிந்து பிரதிபலித்து வருகின்றன, இதன் விளைவாக, வெவ்வேறு கட்சிகள் எப்படி எப்படி இயங்குகின்றன என்பதைப்பற்றியெல்லாம் மக்கள் திட்டவட்டமான ஒரு கருத்தைப்