பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கதா நாயகன் இனிமேல் ‘பவுடர்’ பூசிக்கொள்ளும் வாய்ப்பே பெறாத அளவுக்குப் படுதோல்வி கண்டுவிட்டார் பாவம்!... இவரது அரசியல் சூட்சியின் வெறி உச்சக் கட்டத்தை அடையாதிருந்தால், தி. மு. கவுக்கு ‘முஸ்லீம் லீக்’கின் இணைப்போ, அல்லது, இந்த அளவு இடங்களோ கட்டாயம் கிட்டியிருக்கவே முடியாது! சென்னை நகரம் சுதந்திராக் கட்சியைக் கைவிட்டுவிட்டது! பெரும்பாலான அபேட்சகர்கள் ஜாமீன் தொகையை இழந்துள்ளனர்! சுதந்திராக் கட்சிக்குப் படுதோல்வி ஏற்பட்டுள்ளதென்பதை ஒப்புக்கொள்கிறேன்!” என்று. ராஜாஜியே கூறிவிட்டார், செல்லாக்காசு அதற்குறிய-அதற்குகந்த இடத்தை அடைந்து விட்டது!

கம்யூனிஸ்ட் கரைந்து தேய்ந்துவிட்டது! பி. சோ. முதலிய கட்சிகளின் நிலையும் சென்ற தேர்தலைவிட வருந்தத்தக்கதாகி விட்டது! புதிதாகத் தோன்றிய தமிழ்த் தேசியக் கட்சி பாவம், பலர் ஆதரித்தும்கூட, பொதுமக்கள் கண்களில் பட்டதாகவே தெரியவில்லை!

ஆம்: தேசிய விழிப்புப் பெற்ற பாரதம் சத்திய சோதனையில் வாகைமாலை புனைந்து வெற்றி முரசம் கொட்டி நிற்கிறது. இவ்வெற்றிக்குப் பெருந்துணை நின்ற பெருமை, வாக்காளப் பெருமக்களையே சார்ந்தது. குடு குடு கிழவிகளும் முதியவர்களும் தங்களது கடமையுணர்ந்து மாட்டுச் சின்னத்தில் முத்திரை பொறித்த நிகழ்ச்சிகளை நாட்டின் பல பகுதிகள் கண்டன. ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்குக் கேட்டவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த பெண் குலத்தின் தேசப்பற்றினையும் நாடு கண்டது.

கல்வி, தொழில், வாழ்வு, ஆராய்ச்சி, பாதுகாப்பு போன்ற சகல துறைகளிலும் முன்னேறி வருகிறது நம் ஆட்சி, இம்முன்னேற்றமோ, இங்கு நிலவும் அமைதியோ