பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நீலமணி

121

இம்முறை சற்று பயங்கர வடிவில் பெரிதாக உருவெடுத்துள்ளது. அதுதான் சற்று கவலையாக இருக்கிறது.

எனது கம்பெனியிலிருந்தோ, மில்லிருந்தோ உனக்கு தகவல் ஏதாவது கிடைத்ததா? என்னுடைய மாத்தளை பாக்டரி மனோஜருக்கு போன் பண்ணியிருக்கிறேன். அவர் பெயர் குணரத்னா. அவர் உங்களை இன்று அல்லது நாளை வந்து சந்திப்பார். அவர் உதவியுடன் துறைமுகப் பகுதியிலுள்ள நமது ஒட்டல் எலிசபெத்திற்கு எல்லோரும் போய் விடுங்கள். அது மிகவும் பாதுகாப்பான இடம்.

"நிற்க, ஒரு துயரமான செய்தி பரமு! உனக்கு நான் போன் செய்த மறுநாளே ஞானாம்பாள் இறந்து விட்டாள். இறக்கும்போது நான் அவள் அருகில் இருந்தேன். சாவதற்கு முன் நான் செய்த ஒரு நல்ல காரியம் வள்ளியம்மைக்கு உயில் எழுதி வைத்தது ஒன்றுதான் அண்ணா. அவளையும், பேரனையும் நான் பார்க்கக் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன் என்று கூறிக்கொண்டே இருந்து உயிரை விட்டாள்.

"நான் உடனே புறப்பட முடியாமற் போனதற்கு இது ஒரு காரணம். இனி ஞானாம்பாள் நம்பருக்கு என்னை கூப்பிட வேண்டாம். தேவையானால் என் ஓட்டலுக்கு போன் பண்ணு. நான் எப்படியும் புதன் கிழமை அங்கு வந்துவிடுவேன்.