பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

83

கோயிலில் இரு சன்னதிகள் இருந்தன. ஒன்று முருகன் சன்னதி; மற்றொன்று விநாயகர் சன்னதி. இரு சன்னதிகளிலும் கனமான இரண்டு திரைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. முருகன் சன்னதி, திரையில் முருகப்பெருமானின் படமும், விநாயகர் படமும் வரைந்திருந்தது.

பாபு, ராதா, தங்கமணி, அருணகிரி, காந்திமதி எல்லாரும் திரையை எப்போது விலக்குவார்கள் சுவாமியை எப்போது தரிசிக்கலாம் என்று ஆவலோடு காத்திருந்து கேட்டபோது, லட்சுமி அம்மாள் கூறினாள்:

"இங்கே திரையை விலக்க மாட்டார்கள். அர்ச்சனை, நைவேத்யம். தீபாராதனை எல்லாம் இந்த திரைக்கேதான். அர்ச்சகரைத் தவிர யாரும் திரைக்கு உட்பக்கம் செல்லக் கூடாது, அனுமதிக்க மாட்டார்கள்,” என்று கூறிக் கொண்டிருந்தபோது மணி ஓசை கேட்டது.

சில நிமிஷங்களில் உள்ளே இருந்து திரை ஓரமாக கோயில் அர்ச்சகர் வெளியே வந்தார். அவர் வாயில் வெள்ளத் துணி கட்டியிருந்தார். லட்சுமி அம்மாள் தன்னுடைய பூஜை சாமான்களை எதிரில் வைத்தாள். அதேபோல் பலபேர் பூஜைக்கு எல்லாம் வாங்கி வந்திருந்தனர்.

அர்ச்சகர் எல்லோரும் கொண்டு வந்திருந்த தேங்காய்களையும் திரைக்கு முன்னால் உடைத்து மலர் மாலைகளை திரைக்கு முன்னால் பரப்பி,