பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தென்னைமரத் தீவினிலே...

திரையிலுள்ள முருகனுக்கும், விநாயகருக்கும் தீபாராதனை செய்தார்.

அர்ச்சகர் எல்லாருக்கும் விபூதி பிரசாதங்கள் வழங்கினார். லட்சுமி அம்மாள் திரையின் முன்னால் கண்களை மூடி மெய்மறந்து சிறிது நேரம் பிரார்த்தனை செய்தாள், பிறகு வெளியே வந்த தும் பாபு கேட்டான்: “ஏன் பாட்டி அந்த அர்ச்சகர் வாயில் வெள்ளைத் துணி கட்டியிருக்கிறார். இங்கு எல்லாமே அதிசயமாக இருக்கிறது. கடைசியில் உள்ளே இருக்கும் முருகனை காட்டவே இல்லையே” என்று குறைபட்டுக் கொண்டான்.

“திரைக்கு உள்ளே முருகன் சிலை வடிவில் இருக்கிறானா? அல்லது வேல் வடிவில் இருக்கிறானா? என்பது பற்றி யாருக்குமே தெரியாது. அதுதான் ரகசியம். உள்ளே இறைவன் அறுகோண வடிவில் இருப்பதாகவும், அங்குள்ள சுவாமி அருகில் போகும்போது பேசாமலும், உமிழ்நீர் வெளியே வராது இருக்கவுமே அப்படி அர்ச்சகர் வாயைக் கட்டிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கேன்,” என்று கூறிய லட்சுமி அம்மாள். கனகசபையை பார்த்து, “நான் சொன்னது சரிதானா?” என்று கேட்டாள்.

“ரொம்ப சரி!” என்றவர், “இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் செல்லக்கதிர் காமம் உள்ளது, இங்குள்ள விநாயகர் ஆலயத்தில்