பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

89

வழிபட்டனர். கன்யா நீரூற்று அருகே விநாயகர் கோயிலும் இருந்தது.

“கன்யா ஊற்றுக்கு ஆறு மைல் தூரத்தில் திரிகோணமலையில் ‘ராவணன் வெட்டு’ என்கிற வெட்டுண்ட பாறை இருக்கிறது. ராவணன் தன் அன்னை இறந்தவுடன் கோபமும், துயரமும் கொண்டு வாளை எடுத்து வீசியதாகவும், அது இந்தப் பாறையின் மீது பட்டு பாறை இரண்டாகப் பிளந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். “ராவணன் பாறையை சென்றுச் பார்க்க நமக்கு சமயம் இல்லையாதலால், நாம் இப்போது திரிகோண மலைக்குப் போகலாம்,” என்றார் கனகசபை.

“இந்த மலையின் தெற்கு, கிழக்கு, வடக்கு ஆகிய பாகங்கள் கடலால் சூழப்பட்டு மூன்று கோணமாக ஊர் அமைந்திருக்கிறது. ஒரு கோணத்தில் திருகோணேசுவரர் கோயில் கொண்டிருக்கிறார். தெய்வீகச் சிறப்பு வாய்ந்ததோடு இலங்கையின் கிழக்குப் பகுதியிலே இயங்கும் பெரும் துறைமுகமாகத் திரிகோணமலை திகழ்கிறது. இங்குள்ள கடற்கரை உலகில் உள்ள அழகிய கடற்கரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொழும்பு நகரிலிருந்து 160 மைல் தொலைவில் நாம் இப்போது இருக்கிறோம். வாருங்கள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.” என்று கனகசபை அழைத்துச் சென்றார்.

அப்போது பாபு, “என்ன மாமா கோயிலுக்கு என்று கூறிவிட்டு பீரங்கிக்கோட்டைக்கு அழைத்து