பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 89 'என்ன மிஸ்டர் வெள்ளை| வாளுக்கு வேலியின் தம்பி ஆதப்பன் இருக்கிறானே. அவனுக்கு ஒரு சிங்கக் குட்டியின் பலம் இருக்கும் போலிருக்கிறதே!" 'ஆமாம்! இப்போதுதானே மதுரை நாயக்கர் முன்னிலையில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் ஒரு மாமல்லனையே ஜெயித்திருக்கிறான்!" "மதுரை நாயக்கரா? அவர் யார்? சந்தாசாகிப்பின் படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வேறுவழியின்றி விஷமருந்தி மாண்டாள் ராணி மீனாட்சி| அதற்குப் பிறகு யாரோ பங்காரு நாயக்கர் என்பவர் மராத்தியர்களுடன் சேர்ந்து கொண்டு மகம்மதியர்களின் ஆட்சியை எதிர்த்து அவரும் கொல்லப்பட்டு விட்டார்...அதன் பிறகு மதுரை நாட்டை ஆளுகின்ற நவாப்புக்கள் எங்கள் ஆட்சியுடன் உறவு பூண்டிருப்பவர்கள்தானே! எந்த நாயக்கர்-எந்த மதுரையில் இந்தக் கறுத்த ஆதப்பனுக்கு விருது வழங்கினார்?" "மிஸ்டர் அக்னியூ! பெயர்தான் மதுரை நாடு என்றாலும், கடைசி காலத்தில் திருச்சிதான் மதுரை நாட்டு நாயக்கர் ஆட்சிக்குத் தலைநகரமாக இருந்தது! அப்போதும் மதுரைக்கு ஒரு செல்வாக்கு உண்டு! மதுரை நாடு மகம்மதியர் வசமாகும்போது திருச்சித் தலைநகரில்தான் ராணி மீனாட்சி தற்கொலை செய்து கொண்டாள்! மகம்மதியர் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களது நேரடி கவனத்தில் மதுரை இல்லை! நவாப்புக்களின் கவனத்திற்குரியதாக இல்லாத நாயக்க மன்னர்களின் அழியாத நினைவுச் சின்னங்களான மதுரை மாடமாளிகை கூட கோபுரங்களில் சிலவற்றை உங்களை எதிர்க்கும் விடுதலை வீரர்கள் சிலர் தங்களுடைய பாசறைகளாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்! இதெல்லாம் தங்கள் காதுக்கு இதுவரையில் வராமல் இருந்திருக்காதே!"