பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 95 கிரேயைக் கண்டதுண்டமாக்கிய மருது பாண்டியரைக் கண்டதுண்டமாக்கிக் கழுகுகளுக்கு விருந்தாக்க அவனும் அக்கணமே அந்தப் படையுடன் கிளம்புவதற்குத் தயாரானான், "மிஸ்டர் வெள்ளை! போய் வருகிறேன்" என்று அய்யரின் கையைக் குலுக்கினான் கோபம் கொப்பளிக்க! 'ஆண்டவன் செயலால் உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாதென்று பிரார்த்திக்கிறேன்* என்று ஆசீர்வாதம் வழங்கினார் வெள்ளை அய்யர்! அவருக்கு ஒரு நிம்மதி/ இந்தப் புதிய பதட்டமான செய்தியினால் கர்னல் அக்னியூவுக்கு பாகனேரியார் மீதும் பட்டமங்கலத்தார் மீதுமிருந்த கோபம், வேறுபக்கம் திரும்பி விட்டதென்ற ஆறுதலுடன் அய்யர் அங்கிருந்து வெளியேறினார். பாசறை வீரர்கள் உடனே பயணத்திற்குத் தயாராக சங்கு ஒலிக்கத் தொடங்கியது! அந்தச் சங்கொலி கேட்டு உடல் நடுங்க, உள்ளம் பதற, வெள்ளை அய்யர் பயந்து கொண்டே பாசறையைப் பார்த்தவாறு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தார் குறிப்பு: "Kallarnadu, a rugged region of thorny shrubs, situ- ated between Madurai and Tiruchirapalli, served as the meeting ground of the three parallel rebel organisations of Tirunelveli, Ramnad and Dindigul. The Kallans, the inhabit- ants of this hilly territory, were not only gallant fighters but the inveterate enemies of the Company for generations. Large sections of them had already lent their support to Marudu and associates of Kattabomman. Gopala Nayak