பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 99 வடிவாம்பாள் நடனக் கச்சேரி! அதைப் பார்க்கத்தான் இவ்வளவு கூட்டம்." வர இப்படிப் பதில் சொல்லிக் கொண்டே அந்தக் கூட்டம் விரைந்து நடந்து கொண்டிருந்தது. மேனா மேயன்னா செட்டியார் பெரும் பணக்காரர்! கோடீஸ்வரர்! அவர் வீட்டுத் திருமணத்திற்கு அவசியம் வேண்டுமென்று நேரிலேயே வந்து வாளுக்கு வேலிக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டுச் சென்றார். திருமண நேரத்திற்கே சென்று மணமக்களை வாழ்த்தியிருக்க வேண்டும். கர்னல் அக்னியூவின் திடீர் அழைப்பினால் ஏற்பட்ட பரபரப்பில் செட்டியார் வீட்டுத் திருமணத்தை எல்லோரும் மறந்து விட்டார்கள். ஆனால், இப்போது வாளுக்குவேலிக்கு ஒரு யோசனை தோன்றியது. நேராகச் செட்டியார் வீட்டுக்குச் சென்று விட்டால் திருமணத்தை விசாரித்தது போலவும் இருக்கும். சுந்தராம்பாள் நடன நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அவளிடம் தன் தங்கையின் நடனப் பயிற்சி குறித்துப் பேசிவிட்டு வரவும் வாய்ப்பாக இருக்கும்! அண்ணனின் இந்த யோசனையை ஆதப்பனும் ஏற்றுக் கொண்டான். சாரட்டு வண்டி, செட்டியார் வீட்டை நோக்கித் திரும்பியது. செட்டியார் வீடு இருக்கும் வீதி முழுதும் கண்ணைக் கவரும் அலங்காரம்! வீதியின் இருமருங்கிலும் ஒரே சீரான பனை மரங்களை வெட்டி நட்டு அவற்றின் மீது பெரிய பெரிய அகல் விளக்குகள் எரிய விடப்பட்டிருந்த காட்சி அனைவரையும் ஈர்த்தது! பல ஈர்த்தது) பல வண்ணத் துணிகளைக் கட்டிப் பார்ப்போர் அதிசயிக்கும் வண்ணம் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது! சுந்தராம்பாள் நடன் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு முன்னால் மணமக்கள் அழகுற சிங்காரித்து உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள்.