பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 103 1 "அற்புதமாக இருந்ததம்மா நடனம்! அரம்பையும் ஊர்வசியும் போல ஆடினீர்கள்!" சுந்தராம்பாள் தனது கலைக்கு ஏற்பட்ட அவமானத்தில் சீற்றம் கொண்டிருந்ததால் சட்டென்று கேட்டு விட்டாள்! 'அரம்பை ஊர்வசி ஆட்டத்தைக் கூடப் பார்த்திருக்கிறீர்களா? பலே! பரவாயில்லையே!" "கேள்விப்பட்டதுதான்! முனிவர்களின் தவங்களைத் கூட அவர்கள் நடனத்தால் கலைத்து விடுவார்களாமே!" அவர்கள் நல்லோர் தவத்தைக் கெடுக்கும் நடன ராணிகள்! நீங்கள் நல்ல நடனத்தைக் கெடுக்கும் முனிவர்! இல்லையா?" 'நடனத்தை நான் கெடுப்பதா? என்னம்மா சொல்கிறாய்?" "பந்தலிலே வந்து உட்கார்ந்து கொண்டு பாகனேரி ராஜ்ய பரிபாலனத்தையே செய்து விட்டீர்களே! என்றைக்கும் ஏற்படாத அவமானம், எனக்கும் என் கலைக்கும் இன்றைக்கு உங்களால் ஏற்பட்டு விட்டது" சுந்தராம்பாள், மிகுந்த வேதனையோடும். கோபத்தை அடக்க முடியாமலும் பேசுகிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட செட்டியார் : சுந்தரி! பாகனேரி அம்பலக்காரர், உன் நாட்டி யத்தைப் பாராட்டக் கொடுத்து வைக்க வேண்டுமம்மா நீ போன ஜென்மத்திலே செய்த புண்ணியம்தான் அவர் உன்னுடைய ஒப்பனை அறை வரையிலே வந்து உன்னைப் புகழ்வது என்பதை மறந்துவிடாதே!" என்று வார்த்தை களில் வெல்லப் பாகைத் தடவி வாரி வீசினார்.