பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கலைஞர் மு. கருணாநிதி 'மிகவும் நன்றி! பாகனேரி அம்பலக்காரரால் எனக்குக் கிடைத்த பாக்கியம் ஒன்றே போதும்! பணம் கூட வேண்டாம்! நாட்டிய நிகழ்ச்சிக்கு!" என்று மிடுக்குடன் கூறிக்கொண்டே சுந்தராம்பாள் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கினாள். 'என்னால் உனக்கு ஏதாவது மன உளைச்சல் ஏற்பட்டு விட்டதா? உனது கலைத்திறன் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் உன்னைக் காண வந்தேனே தவிர, உன் உள்ளத்தைப் புண்படுத்தும் நோக்கம் எள் அளவும் எனக்கில்லை?** வாளுக்குவேலி, சுந்தராம்பாளைப் பார்த்து, மிகுந்த பண்புடன் அமைதியாக விளக்கமளித்தான். அருகில் ஆதப்பனுக்குத் தன் அண்ணன் அவ்வளவு விட்டுக் கொடுத்துப் பேசுவது பிடிக்கவில்லை. 'அண்ணா! நேரமாகிறது. போகலாம்!" என்றான். 'இரு தம்பி! வந்த விஷயத்தைப் பற்றிப் பேசாமல் போவதா?" என ஆதப்பனை அடக்கி விட்டு மீண்டும் சுந்தராம்பாளிடம், ‘சுந்தரி! உன்னிடம் ஒரு முக்கியமான கோரிக்கை! என் தங்கை கல்யாணி நாச்சியாருக்கு நீயாவது அல்லது உன் சகோதரி வடிவாம்பாளாவது நாட்டியப் பயிற்சி அளிக்க வேண்டும்!" என்றான். 'கலை என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கும் உங்களைப் போன்றவர்களின் வீட்டில் நாங்கள் காலடி எடுத்து வைக்க மாட்டோம்!" சுந்தரியின் இந்தப் பதிலைக் கேட்ட வடிவாம்பாள் "அக்கா!" என்று அதிர்ச்சியால் அலறி விட்டாள்! நட்டு வாங்கம் நாதமுனிக்கு நாடி நரம்புகள் எல்லாம் நடுங்கின/ லலிதாங்கியோ "சுந்தரி!" என்று கத்திக் கொண்டே அவளை அமைதிப்படுத்த ஓடோடி வந்தாள்!