பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஆலமரங்களைக் கூட அடியோடு பெயர்த் தெறியக்கூடிய சூறைக்காற்று ஒன்று அடித்து ஓய்ந்து விட்டால் எப்படிப்பட்ட அமைதி நிலவிடுமோ அதைப் போன்ற அமைதி திருக்கோட்டியூர் சுந்தராம்பாள் வீட்டில் சூழ்ந்திருந்தது. ஊஞ்சல் சங்கிலியில் தலையைச் சாய்த்தபடி சுந்தராம்பாள் உட்கார்ந்திருந்தாள். அவளது மனோ நிலையைச் சித்தரிப்பது போல ஊஞ்சல் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது. சந்திர பிம்பமோ எனும் படி அமைந்திருந்த அந்த சுந்தர வதனம் சோக முகிலால் ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்டிருந்தது. நடன நிகழ்ச்சியில் பாடப்பட்டதே "வெற்றி வேல்! வீரவேல்! விழியிரண்டும் வேல்! வேல்! என்று; அந்த வேல் நிகர்த்த விழிகள். வதங்கிப் போன அல்லி மொட்டுக்களைப் போல் சோர்ந்து கிடந்தன. ஊஞ்சலை ஒட்டினாற் போல் கிடந்த நாற்காலியில் அச்சம் ஆட்கொண்ட முகத்துடன் வடிவாம்பாள் அமர்ந்திருந்தாள். நட்டுவாங்கம் நாதமுனியும் பின் பாட்டுக்காரி லலிதாங்கியும் ஒருவர் முகத்தையொருவர்... பார்த்துக் கொண்டே துயரப் பெருமூச்சு விட்டனர். சுந்தரியின் அழகுடன் போட்டியிடுவது போல் விளங்கிடும் வடிவாம்பாளின் தோற்றமும் கூனிக் குறுகிக்