பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கலைஞர் மு. கருணாநிதி 'ஒரு பெண்ணைக் கைநீட்டி அடிப்பதற்குத் துணிந்தாரே அதைக்கூட நீங்கள் எல்லாம் அவமானமாகக் கருதவில்லையா?" சுந்தரி சீறினாள். அவர் கையிலிருக்கிற வாளுக்கு எதிரிகள்கூட மதிப்புத் தருகிறார்கள்! அந்த வீரவாளை உனது கால் சதங்கைக்கு ஈடாகுமா என்று நீ கேட்டது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? நல்ல வேளை! அவராக இருந்த காரணத்தால் கையை மட்டும் ஓங்கினார்! கறுத்த ஆதப்பன் முந்திக் கொண்டிருந்தால் உன் கழுத்தை நோக்கிக் கட்டாரியையே ஓங்கியிருப்பான்." நாதமுனி கொஞ்சம் கண்டிப்பாகவும், அழுத்தம் திருத்தமாகவும் பேசினான். "கட்டாரியை ஓங்கினால் என்ன? என் உயிர் போகும்! அவ்வளவுதானே! என்னை வாழ வைக்கும் என் கலைத் தெய்வத்திற்கு மாசு மரு உண்டாக்கு கிறவர்கள் யாராயிருந்தாலும் என்னால் மன்னிக்க முடியாது! அதற்காக நான் மரணத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயார்!" சுந்தரியின் முகம் இப்போது சுடர்விட்டுப் பிரகாசித்தது! கலைத்தாயின் மீது அவள் கொண்ட பற்றும் அந்தக் கலைக்காக எதையும் தாங்கக்கூடிய உறுதியும் அவள் முகத்திலேற்படுத்திய மாற்றம் அது! "என்னமோ அம்மா! நடந்தது நடந்து விட்டது! இதற்கு ஒரே ஒரு பரிகாரம் பாகனேரியார் வீட்டில் அவர் தங்கைக்குப் பரத நாட்டியம் கற்றுத்தரத் தயாராயிருக் கிறேன்னு நீ ஒரு செய்தி அனுப்பிட்டா எல்லாம் சரியாயிடும்! லலிதாங்கி வேண்டுகோள் விடுத்தாள். சுந்தரி அலட்சியமாகச் சிரித்தாள். வடிவாம்பாளும் அக்காளை அணுகி அவள் தோளைத் தழுவிக்கொண்டு "லலிதாங் கியம்மா சொல்வதைக் கேள் அக்கா! அம்பலக்காரர்