பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் வேலைக்காரிக்கு என்றான். அவ்வளவுதான் 121 தெரியுமாம்!" வாளுக்குவேலியின் முகத்தில் ஒரு மலர்ச்சி! சுந்தரியும் தனது தவற்றை உணர்ந்து அதற்குப் பரிகாரமாக அவள் தங்கையை என் தங்கைக்கு நடன ஆசிரியையாக அனுப்பியிருக்கிறாள்/ இவ்வளவு பண்பாடு உள்ளவளைப் பார்த்து எனது வருத்தத்தைத் தெரிவித்தே தீர வேண்டும்! வண்டியைத் திருக்கோட்டியூர் கோயில் வாசலுக்கு ஓட்டச் சொன்னான். ஆலயத்தில் ஆடலரசி ஆண்டவன் சந்நிதானத்தில் பக்தி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தாள்! அர்ச்சகர் பூஜையை முடித்து விட்டு அவளிடம் பிரசாதத்தை வழங்கினார். அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு சுந்தரி பிரகாரம் சுற்றுவதற்குக் கிளம்பினாள். வாளுக்குவேலியின் வண்டி கோயில் வாசலில் நின்றது! உள்ளே ஓடியிருந்த வண்டிக்காரன் திரும்பி விரைந்து வந்தான்: "அய்யா! சுந்தரியம்மா பூஜை முடிந்து கோயில் பிரகாரத்தைச் சுற்றி வர்றாங்க!" "ஓ! அவள் கோயில் பிரகாரத்தில் "பிரதட்சணமாக" வருவாள்! நான் "அப்பிரதட்சணமாக"ப் போனால்தான் அவளை எதிரே சந்திக்க முடியும்." வாளுக்குவேலியின் வாய் வாய் இவ்வாறு முணு முணுத்தது! அந்தி மாலையும் தன்னை அடையாளம் காட்டாமல் இருக்க உதவிடும் என்ற நம்பிக்கையுடன் வாளுக்குவேலி வண்டியை கோயிலுக்குள் நுழைந்தான். விட்டு இறங்கிக்