பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 தென்பாண்டிச் சிங்கம். 147 பால் சொம்பையும், பழத்தட்டையும், வெள்ளிக் கிண்ணங்களையும் கையில் வாங்கிக் கொண்ட வடிவாம்பாள் அகத்தில் அக்கினி நாக்குகள் ஆயிரம் ஆயிரம் தனது அக்காளைச் சபித்திட-முகத்திலே மட்டும் மோகனம் காட்டியவாறு, படிகளில் ஏறி மாடி அறையை அடைந்தாள்! மாடியில் அக்காளின் படுக்கை அறை மல்லிகை தூவிய மலர் மஞ்சமாகத் திகழ்ந்தது! ஊதுவத்தி மணம் கமழ்ந்தது! கட்டிலின் இருபுறமும் திடீரென இரண்டு நிலைக்கண்ணாடிகள் முளைத்திருந்தன! பால். பழத்தட்டுடன் அங்கே நுழைந்த வடிவாம்பாள் அசைவற்று நின்றாள். அவளது மனக்கண் முன்னால்- அந்த மெத்தையில் வாளுக்கு வேலி சயனித்திருப்பது போல் தெரிந்தது! அவனது அகன்ற மார்பில் தலை வைத்தவாறு அவளே படுத்திருப்பது போலத் தோன்றியது! பாலும் பழத்தட்டும் அவளையறியாமல் அவள் கைகளில் இருந்து நழுவின! கீழே விழுந்து பால் சொம்பு உருண்டது! பழங்களும் சிதறின 康康