பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 கர்னல் அக்னியூ. வெல்ஷ் துரைக்கு அனுப்பிய கடிதம் என்ன ஆனது என்பதை உறங்காப்புலி அக்னி யூவுக்குத் தெரிவிக்காமல் இருப்பானா? அந்தக் கடிதம் பறிக்கப்பட்ட காரணத்தால்தான் வெள்ளைப்படைக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது என்பதை எண்ணி அக்னியூ வெகுண்டான்! இருந்தாலும் ஆத்திரத்தில் அறிவிழந்துவிடக் கூடாது என்பதிலே எச்சரிக்கையாக இருந்தான். தோல்வி யால் தொங்கிப்போன முகத்துடன் தன் எதிரில் நின்ற உறங்காப்புலிக்கு, மதுரையில் தங்கியிருந்த அக்ளியூ வகுத்துக் கொடுத்த திட்டம் இதுதான்: "நீ கடிதம் கொண்டுபோன செய்தியோ அல்லது அதனை வழியில் கறுத்த ஆதப்பன் அபகரித்துக் கொண்ட நிகழ்ச்சியோ வல்லத்தரையனுக்குக்கூடத் தெரியக் கூடாது! ஆதப்பன், வேண்டுமென்றே திட்டமிட்டு, உன்னை ஆட்களை வைத்துத் தாக்கினான் என்றும், அதற்குப் பாகனேரிக்காரனைப் பழிக்குப்பழி வாங்கியே தீரவேண்டும் என்றும், நீ உனது மைத்துனன் வல்லத் தரையனிடம் உசுப்பிவிட வேண்டும்! அப்படியொரு பயங்கர் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் பாகனேரி அம்பலக்காரனுக்கு ஏற்பட்டால்தான் "கோபால நாயக்கர் மருது பாண்டியர் கூட்டணி'யில் அவன் சேராமல் இருப்பான். "