பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 189 மாட்டின் கதறலும் தொடர்ந்து கேட்கத் தொடங்கியது. வைரமுத்தன் அவன் அறையிலிருந்து ஓடினான். வீரம்மாள், உறங்காப்புலியை எழுப்பிவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு தொழுவத்தை நோக்கி ஓடினாள். காவலர்களும் ஓடினார்கள். பாகனேரியிலிருந்து அம்பலக் காரர் ஆட்கள் வந்துதான் ஜல்லிக்கட்டுக் காளையை அடிக்கிறார்கள் என்று அவர்கள் முடிவு கட்டிக் கொண்டு கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு விரைந்தனர். னால் அங்கே அவர்கள் கண்ட காட்சி என்னா. தன் உயிரைப் போல் நேசித்து வளர்த்த காளையை வல்லத்தரையன் தனது கையில் வலுக்கொண்ட மட்டும். சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தான். அது கதறியது. எகிறிக் குதித்தது. 'அண்ணா! அண்ணா!" என்று அவறியடித்துக் கொண்டு வைரமுத்தனும் வீரம்மாளும் தொழுவத்தை நெருங்கினார்கள்! 'யாரும் வராதீர்கள்! யாரும் குறுக்கிடாதீர்கள்! கொழுத்துப் பெருத்து வளர்ந்த இந்தக் கழுதை; என் குலத்திற்கே அவமானம் தேடிக் கொடுத்து விட்டது/ எந்தக் கொம்புகளைப் பயன்படுத்தி என் குலப் பெருமையை நிலைநாட்டாமற் போனாயோ அந்தக் கொம்புகளா லேயே என் குலத்திற்கு விளைந்த களங்கத்தைக் கழுவு!" மாறி மாறிச் சவுக்கால் அடித்தான்! அடி தாங்காத காளை கட்டுண்ட நிலையிலேயே அவன்மீது பாய முனைந்தது! "இதைத்தான் நான் விரும்பினேன்; வாழ்க பட்டமங்கலத்தின் தன்மான உணர்வு வாழ்க வாழ்க!"