பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கலைஞர் மு. கருணாநிதி வல்லத்தரையன் உயிரோடு இல்வைர் ஆனால் அவன் வலிமை வாய்ந்த சிங்கக்குரல் வைரமுத்தனின் இதய அரங்கத்தில் ஒங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. “தம்பீ” வைரமுத்தா! உன்னை வயிற்றில் சுமந்தாள் நமது அன்னை! நான் நாளெல்லாம் தோளில் சுமந்தேனடா உன்னை! உன்மீது ஒரு தூசு தும்பு படக் கூடாதென்று நம் தாயும் தந்தையும் பாதுகாத்ததை விட, நான்தானடா அதில் மிக அக்கறை எடுத்துக் கொண்டேன்! எனக்கு மணமாகி எனக்கொரு பிள்ளை பிறந்தால் பட்டமங்கலத்து வாரிசு நீ இல்லை என்று ஆகிவிடுமே என்பதற்காகத்தானடா பிரம்மசாரியாகவே வாழ முடிவெடுத்தேன். இப்படியொரு அன்புத் தம்பிக்காக நெஞ்சக் கூடாரம் முழுவதையும் ஒதுக்கி வைத்துள்ள அண்ணனைப் பார்ப்பது அவ்வளவு எளிதல்லடா எனதருமை னவரமுத்தா! ஆனால் எனக்கேற்பட்ட களங்கத்தைக் கண்டாயா? பட்டமங்கலத்துக் கீர்த்தி மகுடத்தால் அணி செய்யப்பட்ட உன் அண்ணனின் தலைமுடி, பாகனேரித் தரைப் புழுதியில் புரண்ட காட்சியை உன்னால் எண்ணிப் பார்க்கவாவது முடிகிறதா? நமது குலம் மண்ணை இழக்கலாம்! மாடமாளிகைகளை மணி மகுடங்களைக்கூட இழக்கலாம்! ஆனால் மானத்தையிழக்க முடியுமாடா தம்பீ! நம்பவே முடியாத ஒன்று நடந்து விட்டதே! மான உணர்வுக்கு என் ஆவியையே அர்ப்பணம் செய்து விட்டேனே! இவ்வளவுக்கும் பிறகு-திருமணம், சம்பந்தம் என்று இச்சகம் பேசிக்கொண்டு வருகிறார்களே எவ்வளவு கீழான எண்ணம் இவர்களுக்கு நம்மைப் பற்றி! பாவம்; உனக்குப் பெரிய சிக்கல்தான்! இங்கே பார்த்தால் அண்ணன்-அங்கே பார்த்தால் ஆருயிர்க் காதலி/ பழைய பாசமா? புதிய நேசமா? இப்படியொரு பயங்கரப் போராட்டத்தில் தவிக்கிறாய் நீ!