பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கலைஞர் மு. கருணாநிதி - உள்ளத்தில் ஒலித்த அண்ணனின் கேள்விகள் ஒன்று பத்து நூறு ஆயிரம் என்று உருவெடுத்தனர் "ஏற்கத்தான் போகிறேன்" என்று வாய்விட்டுக் கூறிக்கொண்டே வைரமுத்தன் வேகமாகத் திரும்பினான். அவன் திரும்பிய பக்கத்தில் வெள்ளை அய்யரும், உறங்காப்புலி,வீரம்மாள் ஆகியோரும் இருந்தனர். "வைரம்! என்ன சொல்லுகிறாய்? நீதான் பேசுகிறாயா? ஏற்கத்தான் போகிறாயா? யாரை?" '"அக்கா! பாகனேரி சம்பந்தத்தைத்தான் ஏற்றுக் கொள்ளப் போகிறேன்!" உறங்காப்புலி உறுமிக் கொண்டே முத்தனின் முன்னே வந்து நின்று "இதைவிடப் பெரிய துரோகம் உன் அண்ணனுக்குச் செய்யவே முடியாது!" என்று கத்தினான். "அப்படியானால் என்னை நம்பியிருக்கும் அந்தக் கள்ளமிலாப் பாவை கல்யாணிக்குத் துரோகம் செய்யலாம் என்கிறீர்களா?" வைரமுத்தன் உறங்காப்புலியையும் வீரம்மாளை யும் ஒருசேர நோக்கினான். நினைத்தால் நிலவையே பிடித்துப் பெண்ணாக்கிக் கொண்டு வரலாம்! அதை விடுத்து நெருப்புக்குப் பஞ்சு மெத்தை விரிக்கப் போகிறேன் என்கிறாயே நியாயமா?" உறங்காப்புலியின் குரல் சற்றுத் தணிந்து பணிந்து அறிவுனர கூறும் பாணியில் அமைந்திருந்தது. வைரமுத்தன் கல்யாணியின் மீது கொண்ட காதலையே முதலாக வத்துப் பட்டமங்கலம் பாகனேரிப் பகைமையைக் களைந்திட இதுவே தக்க தருணமென்று கருதிய வெள்ளை அய்யர் குறிப்பிட்டார் ·