பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 227 "பெண் பாவம் பொல்லாதது உறங்காப்புலி! வீரம்மா! நீயும் யோசித்துப் பார்! உனக்கு இப்படியொரு அனுபவம் ஏற்படாத காரணத்தால் கல்யாணி எப்படிக் கலங்கித் தவிப்பாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தெய்வ சங்கல்பம் கல்யாணியையும் வைரமுத்தனையும் பிரேமை கொள்ளச் செய்துவிட்டது. ன்னார்க்கு இன்னார் என்று அவரவர் தலையிலே எழுதிப் போட்டிருக்கும்போது அதை மாற்ற முடியுமோ? எப்படியோ இரண்டு அம்பலக்காரர் குடும்பங்களுக்கும் பகை வளர்ந்து போச்சு. அதைப் பெரிசா ஆக்கிட்டே போயி இரண்டு நாடுகளும் அழிஞ்சு போறதிலே யாருக்கு இலாபம்? இங்கிலீஷ் கம்பெனிக்காரனுக்குத்தான் லாபம்! சரித்திரத்திலே எத்தனையோ அரச குடும்பங்கள் ஒன்றோடொன்று வெட்டுப்பழி குத்துப்பழியா சண்டை போட்டுக்கிட்டிருந்து, கடைசியிலே கொள்வினை கொடுப்பினைகளாலே ஒற்றுமையா ஆகியிருக்கின்றன! பேசாம வைரமுத்தன் இஷ்டத்துக்கு விடுங்க! எல்லாம் நல்லதா நடக்கும்! அய்யரின் இந்த உபதேசத்தை உறங்காப்புலி ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை. எல்லாம் நல்லதாக நடப்பதா? அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளத்தானே அவன் அக்னியூ துரையிடம் அவ்வப்போது பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு காரியமாற்றுகிறான். வெள்ளை அய்யர் பேச்சைக் கேட்டால் அவனது குறிக்கோள் நிறைவேறுமா? சாமீ! நாங்களே ஒத்துக்கிறதா வச்சுக்கிங்க! நாளைக்கு இந்த ஊர் ஒத்துக்குமா? பாகனேரிக்காரங்க பட்டமங்கலத்தை அவமானப்படுத்தினது மாத்திரமல்ல; பெண்ணையும் கொடுத்து இப்படிப் பெட்டிப்பாம்பா அடக்கியும் போட்டுட்டாங்கன்னு ஊர் பேசாதா? என்ன வந்து கிடக்கு சகோதரப் பாசம்? அண்ணன் செத்து