பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கலைஞர் மு. கருணாநிதி சந்தேகம் நியாயமானதுதான்! அனால் அய்யர் அவனுக்கு உறுதியளித்தார் வைரமுத்தன் வார்த்தையைக் காப் பாற்றக் கூடியவள் என்றும் அவனை நம்பலாம் என்றும் திடமாகச் சொன்னார். மணமகள் கல்யாணி நாச்சியார் மணவிழா மேடைக்கு வந்தாயிற்று இன்னும் மணமகனைக் காணவில்லையே! பந்தலில் சுற்றுமுற்றும் பார்த்தனர்! நாயன இசை அமுதவாரியெனப் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. புரோகிதர்களின் மந்திரங்கள் உரக்க ஒலித்த வண்ணமிருந்தன! "என்ன அய்யரே! இன்னமும் காணவில்லை?" ஒரு வறண்டு போன பார்வையுடன் வாளுக்கு வேலி கேட்டான். அவசரப்பட வேண்டாம்" என்று அய்யர் சொல்லி முடிப்பதற்குள் பட்டமங்கலத்து அம்பலக்காரர் வீட்டுப் பெட்டி வண்டிகள் பத்துக்கு மேற்பட்டவை பந்தல் வாசலில் வந்து நின்றன. முதல் நாலைந்து வண்டிகளில் இருந்து பட்ட மங்கலத்துக் குடும்பத்தின் உற்றார் உறவினர்கள் இறங்கி வந்தனர். அவர்களை உபசரித்து வரவேற்றான் வாளுக்கு வேலி/ ஆனாலும் அவனது கவனமெல்லாம் வைரமுத்தன் எந்த வண்டியில் இருந்து இறங்கப் போகிறான் என்ப திலேயே இருந்தது. அடுத்து ஒரு வண்டியில் இருந்து உறங்காப்புலியும் வீரம்மாளும் இறங்கினார்கள். கறுத்த ஆதப்பன் அவர்களை எதிர் கொண்டழைத்து வரவேற் றான். அவர்கள் முகத்தில் மருந்துக்குக்கூட மகிழ்ச்சியின் சாயல் இல்லை. அந்த வண்டி நகர்ந்த பிறகு அந்தப் பெரிய வண்டி பந்தல் முகப்பில் வந்து நின்றது. அதிலிருந்து யாரும் உடனே இறங்கக் கூடாதா? வாளுக்குவேலியை அப்படியா சோதிக்க வேண்டும்! என்னதான் சமாதானம் சொன்னாலும் கூட வெள்ளை அய்யருக்குக் கூடக் கொஞ்சம் அச்சம்தான்!