பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கலைஞர் மு. கருணாநிதி -மேலும் அதைப்பற்றிப் பேசி விவாதத்தை வளர்த்தவோ அல்லது விரிவான விளக்கம் பெறவோ அவள் தயாராக இல்லை! அதன் மூலம் எதிர்பாராத விபரீதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவள் எச்சரிக்கையாக இருந்தாள். அதனால் கண்களைத் துடைத்துக்கொண்டு அவனை மிகுந்த மரியாதையுடன் பார்த்தாள். உம்/ பாலைச் சாப்பிடு!" என்று ஒரு கிண்ணத்தை நீட்டினான். அதை அவள் வாங்கித் தலையைக் குனிந்து கொண்டே அவன் வாயருகே கொண்டு போனாள். அவள் தந்த கிண்ணத்துப் பாலை அருந்திக் கொண்டே, தன் கையிலிருந்த பால் கிண்ணத்தை அவளது இதழ்களுக்கிடையே பொருத்தினான். அவளும் ஒரு புதிய சுகம் கிடைக்கப் பெற்றவளாக உடம்பெல்லாம் சூடேறிக் கொண்டிருக்கும் நிலையில் அவன் தந்த பாலைக் குடித்தாள். கல்யாணி!... உனக்கு நடனம், வீணை, பாட்டு எல்லாம் தெரியுமாமே! உம்!உம்! உண்மைதானா?" விளக்கொளியில் அவள் சிவந்த கன்னங்களில் நாணப் புன்னகை விளைவித்த ரோஜாக் குழிகள் தோன்றி மறைந்தன! தெரியும் என்பதற்கான சைகை போலும் அது! வைரமுத்தன், அவளை முதுகுப்புறம் அணைத்தவாறு அழைத்துச் சென்று, மஞ்சத்தில் உட்கார வைத்தான். அவளது நாடி நரம்புகளில் குருதியோட்டம் துள்ளிக் குதியாட்டம் போட்டது. இதயம் பல மடங்கு வேகமாகப் படபடத்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தாள். பாகனேரி எல்லையில் கட்டாரிக்கு முத்தம் கொடுத்தபோது இருந்த தெம்பும் தைரியமும் இப்போது எங்கோ பறந்து விட்டன!