பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் வைரமுத்தன் படுக்கையிலிருந்து 243 எழுந்து சென்றான். அவள் மீண்டும் திடுக்கிட்டாள். ஒரு வேளை அந்தப் பயங்கரமான நினைவுச் சின்னங்களை எடுத்துக் கொண்டு வந்து விடுவானோ என்றுதான் அஞ்சினாள். காதல் மழைப்பொழிவு ஒரு புறம்; கலக்கமளிக்கும் பேரிடியோசை யொருபுறம்! நல்ல வேளை! அவள் பயந்தது போல நடக்க ல்லை. அங்கே ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த வீணையைத்தான் அவன் தூக்கிக் கொண்டு வந்தான்; அதைப் படுக்கையில் வைத்தான். "உம்! மீட்டு!" என்றான். அவள் மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்து "நீங்கள் மீட்டுங்கள்!"" என்ற சொற்களைக் கண்வழியே நடமாட விட்டாள். "நான் மீட்டப் போகும் வீணைதான் பேசும் வீணையாயிற்றே! நீ இந்தப் பேசாத வீணையை உன் காந்தள் விரல்களால் பேச வை! கேட்கிறேன்! என்றான். தயங்கினாள். அவள் தளிர்க் கரத்தை யெடுத்து வீணை மீது மென்மையாக வைத்தான். மெல்ல அதிர்ந்தன வீணையின் நரம்புகள்! ஆனால் அவள் நரம்புகளோ பச்சை வண்ணங் கொண்டு அந்தச் சிவந்த மேனியில் கொடிகளைப் போல் படரத் தொடங்கின! சை வெள்ளம்! தேனருவி! தெவிட்டாத அமிழ்தம்! இன்ப நாதம்!... வைரமுத்தன் இசையைப் பருகித் திளைப்பவனைப் போல அறையின் பலகணிப் பக்கம் சென்று நின்று கல்யாணியையே கவனித்துக் கொண்டிருந்தான். நரம்புகளைத் தடவி இசை வாரிதியை வர வழைத்துக் கொண்டிருந்த அவள் விரல்கள் மெல்ல மெல்லத் தங்கள் அசைவை நிறுத்திக் கொண்டன.