பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 கலைஞர் மு. கருணாநிதி அடங்குவதற்குள். கறுத்த ஆதப்பன் அவன் கையிலிருந்த தீப்பந்தத்தை வேகமாக வாங்கிக்கொண்டு '"அண்ணா! அண்ணா! நான்தான் கறுத்த ஆதப்பன், இதோ நமது மைத்துனர் வைரமுத்து" எனக் கத்தியவாறு எதிரில் நின்ற திரைகளின் கூட்டத்திற்குள் நுழைந்தான். சிறுவயலில் ஆதப்பன், அக்னியூ துரையுடன் போரிட்டு இறுதியில் கைது செய்யப்பட்டு விட்டான் என்ற செய்தி பட்டமங்கலத்திற்கு எட்டியது போலவே வெள்ளை அய்யர் அனுப்பிய தகவலின் மூலம் பாகனேரிக்கும் ஏறத்தாழ அதே நேரத்தில் எட்டியிருந்தது. தம்பி ஆதப்பன், இன்னும் கொஞ்சம் இலைமறைகாயாக இருந்து கொண்டு விடுதலைப் படைக்கு உதவிகளைச் செய்திருக்க வேண்டுமே தவிர, இப்படி வெள்ளைக்காரக் கர்னலிடம் நேருக்கு நேர் சிக்கிக் கொண்டு ராஜதந்திர மில்லாமல் நடந்து கொண்டிருக்க வேண்டியதில்லையென வாளுக்குவேலி நினைத்தான் என்றாலும், ஆதப்பன் கைது செய்யப்பட்டதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் கைது செய்யப்படக்கூடும் என்பதையும், சிறுவயல் வெள்ளையரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி யிருக்கிறது என்பதையும் கேள்விப்பட்ட மாத்திரத்தில் சுந்தராம்பாளின் வீட்டிலிருந்து பாகனேரி அரண்மனை நோக்கிப் பரபரப்புடன் வந்தவன், சிறுவயல் அழிந்த செய்தியையும்-ஆதப்பன் ஆங்கிலேயரிடம் அகப்பட்ட செய்தியையும் எப்படிச் சகித்துக் கொள்வான்? "மேகநாதா! நம் வீரர்கள் நூறு பேர் புறப்படட்டும்! நீயும் என்னுடன் கிளம்பு! நாலுகோட்டையில் முகாமிட்டி ருக்கிறானாம் அந்த நாடோடி! அவனையும் கொன்று. நாலு கோட்டையையும் நாலாயிரம் துகள்களாகச் சிதற அடிக்கிறேன்! தம்பி ஆதப்பனை மீட்டுக் கொண்டு திரும்புவது - இல்லையேல் நாலு கோட்டையிலேயே எனக்குக் கல்லறை"