பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 303 செய்தேன். ஆனால் தம்பி! நான் கல்யாணியின் அறையில் மிகவும் பயந்து நடுங்கிக் கொண்டு தானிருந்தேன். அவளது வேதனையைக் கேட்டு, நீ வெகுண்டெழுந்து அலறிவிடுவாயோ என்ற அச்சம் என்னை ஆட்டிப் படைத்தது. நல்லவேளை! அமைதியாக இருந்து உண்மையைத் தெரிந்து கொண்டாய்!" கறுத்த ஆதப்பன், விரல் கொண்டு, தனது விழி நீரைத் துடைத்துக் கொண்டான். துன்ப உணர்வு அவன் தொண்டைக் குழியை அழுத்திக் கொண்டிருந்தது. "கல்யாணியிடம் நீங்கள் கொண்டுள்ள அன்புக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை. ஆமாம்; இன்னமும் வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற வஞ்சினத்தோடுதான் வைரமுத்தன் இருப்பதாக நான் கருதினால் அதில் தவறில்லை அல்லவா?" 'அது எப்படித் தவறாக முடியும்? பட்டமங்கலத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அவமானம் சாதாரணமானதா? அதற்குப் பழிவாங்கத் துடிக்கும் வைரமுத்தனின் உணர்வுக்கு அணை போட்டுத் தடுக்க யாராலும் முடியாது. ஆனால் ஒன்று-நான் ரைவமுத்தனிடம் வேண்டிக் கொண்டிருப்பதெல்லாம் ஆடவர்களாகிய நீங்கள் தேடிக் கொண்ட பகைக்குப் பாவம் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பலியாக்காதீர்கள் என்பதுதான்!" 'உங்களின் வேண்டுகோளை வைரமுத்தன் ஏற்றுக் கொண்டதாக நான் நம்பலாமா?" 'நானே அப்படித்தான் நம்புகிறேன். அவனுக்கு மனமாற்றம் ஏற்பட்ட காரணத்தினால்தான் கல்யாணி" மயங்கி விழுந்தவுடன் பதறிப் போனான் அதன் விளைவாகத்தான் உன்னை விடுவிக்கவும் உடனே புறப்பட்டான்.'