பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 கலைஞர் மு. கருணாநிதி மெதுவாக நகர்த்திக் கொண்டே கட்டிலருகே வந்து அவளை உட்கார வைத்தான். அவனும் அருதே உட்கார்த்து கொண்டான். யார் முதலில் பேசுவது, என்ன பேசுவது, எப்படிப் பேசுவது, என்று தெரியாமல் இருவருமே தவித்தனர். தனது வலது கை விரல்களால் அவளது வலது கை விரல்களைப் பின்னிக் கோத்துக் கொண்டு இரு கரங்களையும் உதடுகளில் பதித்துக் கொண்டு 'இச்' என்று ஈந்தாள் முத்தம். அவள் தலை நிமிர முடியாமல் அவனது வலிமை செறிந்த தோளில் சாய்ந்து கொண்டது. கல்யாணியின் விரல்களைத் தடவிக் கொண்டிருந்த அவன் கரம் மெல்ல ஊர்ந்து அவளது மணிக்கட்டு, முன்கை, மூங்கில் நிகர்த்த தோள் என்று நகர்ந்து கொண்டேயிருந்தது. இருவரது நரம்பு மண்டலமும் உலையிற் காய்ச்சிய செப்புக் கம்பிகளைப் போல் சூடேறித் தகிப்பதை அந்தத் தழுவலின் மூலம் தான் பொறுத்துக் கொள்ள முடிந்தது அவர்களால்! அதனால் தழுவியவாறு கட்டிலில் படுத்தனர். இருவர் கன்னங்களும் ஒட்டிக் கொண்டன. ஈரிரண்டு இதழ்களும் ஒன்றையொன்று பற்றிக் கொண்டு. தேனமுதத்தைத் தெவிட்டாது பருகின. அப்போது வைரமுத்தனின் கன்னத்தில் இரண்டொரு நீர்த்துளிகள் குதித்து உருண்டன. "கல்யாணி! அழுகிறாயா?" அவளது கண்களைத் தன் உதடுகளால் அழுத்தி முத்தத்தால் ஒத்தடம் கொடுத்தான். “அத்தான்!” தாங்க முடியாத வலியால் துடித்துத் துவண்ட ஒருத்தி, ஆண் குழந்தையைப் பிரசவித்தது போல அந்த 'அத்தான்' என்ற வார்த்தையை உச்சரித்து விட்டு அப்படி உச்சரித்த மகிழ்ச்சியில் கல்யாணி திளைத்தாள். 'என்னை மன்னித்துவிடு கல்யாணி! உன்னைக் கொடுமைப் படுத்திவிட்டேன்..."