பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 317 தான் ஒரு பாரதப் போரே நடந்தது என்பதை மறந்து விடாதே; அதுவும் அண்ணன் தம்பிகளுக்குள் - குரு சிஷ்யர்களுக்குள்!!" "பாரதப் போர் பாஞ்சாலியை முன்னிட்டு நடந்ததல்ல! இழந்த நாட்டை மீட்பதற்காக நடைபெற்ற போராட்டம்! பாஞ்சாலியை அவமானப் படுத்தியதற்காக நடந்த யுத்தம் என்றால் அந்தக் கணமே அல்லவா ஆரம்பமாகியிருக்க வேண்டும்? பன்னிரண்டு வருடம் வனவாசம் புரிந்துவிட்டு, அதற்குப் பிறகும் பாண்டவர் கேட்டது என்ன? ஐந்து நாடு அல்லது ஐந்து ஊர் அல்லது ஐந்து தெரு அல்லது ஐந்து வீடு என்றல்லவா கோரிக்கை வைத்துத் தூது அனுப்பினார்கள்! தருமன் மனைவியை மானபங்கப்படுத்தியதற்காகப் பழி வாங்குவதற்குத் துரியோதனனின் மனைவியையா மானபங்கப்படுத்த நினைத்தார்கள்? இல்லையே!" 'ஓ! ஓ! உன்னுடைய புராணக் காலட்சேபத்தைக் கவனித்தால் உன் கணவன் இந்த உறங்காப்புலிக்கு நேர்ந்த அவமானத்தையும் உன் அண்ணன் வல்லத் தரையனுக்கு நேர்ந்த அவமானத்தையும் பெரிதுபடுத்த வேண்டாமென்கிறாய் என்று புரிகிறது" "அதைப் பெரிது படுத்தாமல்தானே இரண்டு பலம் பொருந்திய கள்ளர் நாடுகளும் சம்பந்திகளாகி விட்டி ருக்கின்றன என்று மற்றக் கள்ளர் நாடுகள் எல்லாம் மகிழ்ந்து கொண்டிருக்கின்றன! அந்த மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப் போடலாமா?" "நீ மிக விசாலமான மனதுக்குச் சொந்தக்காரியாகி விட்டாய்-ஏன் என்றால் பாகனேரியில் செக்குமாடாக ஆக்கப்பட்டது நியல்லவே! நானல்லவா? அமைதியின் வடிவமாகி அறநெறி போதிக்கும் உன்னை அண்ணனின் ஆத்மா சபிக்கும் என்பதை மட்டும் உனது