பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 கலைஞர் மு. கருணாநிதி 'எனக்குக் கல்யாணியைப் பற்றித்தான் கவலை யாக இருக்கிறதண்ணா." கறுத்த ஆதப்பனின் கண்களில் துளிர்த்திட்ட நீர்த் துளிகளைத் தன் விரல் கொண்டு துடைத்தவாறே வாளுக்கு வேலி, 'கவலைப்படத் தேவையில்லை! நமது இருநாடுகளுக்குமிடையே உள்ள பகை உணர்ச்சிக்கும் அப்பாற்பட்டு மலர்ந்தது கல்யாணி வைரமுத்தன் காதல்! அதனால்தான் விரோதத்தைக் கூடப் பாராட்டாமல் வைரமுத்தன் விவாகத்திற்கு ஒப்புக் கொண்டான்" என்று நம்பிக்கையோடு கூறினான். வீரம்மாள் வாயிலாகக் கல்யாணியின் அவற்றை நிலைமைகளை அறிந்திருந்தாலுங்கூட, அண்ணனிடம் சொல்லி அவனது நம்பிக்கையை நாசமாக்க வேண்டாமென்று ஆதப்பன் தீர்மானித்துக் கொண்டான். கல்யாணியின் காதில் விழும்படியாக உறங்காப்புலி ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரம், பட்டமங்கலம் அரண் மனைக்குள் பரவலாக நடைபெற்றது. 'வைரமுத்தனின் திட்டப்படிதான் எல்லாம் நடந்தது. வீரம்மாளும் அதற்குத் துணையாக இருந்து ஆதப்பனை ஊருக்கு அனுப்புவது போலப் பாவனை செய்திருக்கிறாள். முன்கூட்டியே பேசி முடித்தவாறு ஆதப்பன் உறங்காப்புலியினால் வழியில் மடக்கப்பட்டு விட்டான். வைரமுத்தன், வீரம்மாள், உறங்காப்புலி மூவரும் இணைந்து செய்த சதிக்கு மாபெரும் வெற்றி கிடைத்து விட்டது. செக்கு மாட்டுடன் சேர்ந்து செக்கு இழுத்தது மட்டுமல்ல; உறங்காப்புலியின் கையில் சாட்டையடியும் வாங்கிய ஆதப்பன் -வைரமுத்தன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதால்தான் உயிர் தப்பி ஓட முடிந்தது! பழி வாங்கும் படலம் ஒரு பாகம்