பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 கலைஞர் மு. கருணாநிதி "தொடாதீர்கள் என்னை!* வீணைபோல் அதிர்ந்திடும் கல்யாணியின் குரல், வில் ஒன்று ஒடிக்கப்பட்டதாகச் சொல்வார்களே ராமாயணத்தில்; அப்போது கிளம்பியதாகக் கூறப்படும் ஒலிபோல இடித்தது! “தந்தம் இழைத்த கட்டில் இருக்கும் போது என் தங்கம் தரையில் படுப்பானேன்?" வைரமுத்தன், அவளது உணர்ச்சியைப் புரிந்து கொண்டு, மேலும் மென்மையாகப் பேசினான். “தரையை விட்டுத் தந்தக் கட்டிலுக்குப் போனால் போன மானம் மீண்டும் வந்துவிடுமா?" கல்யாணியின் கிளம்பியது. கேள்வி, தீப்பொறியாய்க் 'இதில் தில் மானப் பிரச்சினை எதுவுமே இல்லை கல்யாணி! அவமானத்தின் நிழல்கூடத் தன்மீது படாமல் உனது அண்ணன் பாகனேரிக்குச் சென்று விட்டது உனக்குத் தெரியாதா? "எல்லாம் தெரியும்! என் அண்ணனை இப்படி அலங்கோலப்படுத்தவே ஆங்கிலேயர் முகாமிலிருந்து விடுவித்து வந்தீர்கள் என்பதும் தெரியும்!" "நீ என்ன சொல்கிறாய் கல்யாணி?" 'என் அண்ணனைச் சதி செய்து நீங்கள் கொலை கூடச் செய்திருக்கலாம்! அதை விடுத்து இந்தக் கேவலமான செயலில் ஈடுபட்டிருக்க வேண்டாம்!** "என் மைத்துனரை மாடாக்கி ஓட்டினீர்கள்! என் அண்ணனை அவமான உருவமாக்கி அவர் சாவுக்குக் காரணமானீர்கள்! அத்தனையும் மறந்துவிட்டுத்தான். உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன்!!"