பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 'தம்பி, வைரம்! கல்யாணியுடன் நானும் பேசிப் பார்த்து விட்டேன். அவள் என்னுடன் பேசுவதையே விரும்பவில்லை. என்னை ஒரு சூன்யக்காரி போலவே நினைக்கிறாள். அவள் மனத்தைக் குமுற வைப்பதற்காகவே நீ வேண்டுமென்றே அந்த வடிவாம்பாளிடம் தவறுதலாக நடந்து கொள்வதுபோல் நடித்தாய் என்று நான் சொன்னதை நம்பியிருந்தாள்! ஆனால் நீ இப்போது வடிவாம்பாள் வீட்டுக்குச் சீர்வரிசை அனுப்பியிருப்பதும், அங்கே நீ போகப் போவதும்- நான் கல்யாணியிடம் பொய்தான் பேசினேன் என்று அவள் நினைப்பதற்குச் சந்தேகமில்லாத ஆதாரங்களாகி விட்டன" 'ஆமாம் அக்கா! நீ கல்யாணியிடம் முதலில் சொன்னது உண்மைதான்! அந்த உண்மை அப்படியே மாறாமலே இருந்திருக்கும். அதை மாறும்படி செய்த குற்றம் கல்யாணி உடையதுதான்!" "கட்டிய என்ற பெயர் மட்டும் இருக்கட்டும். கடவுள் மீது ஆணையாக என்னைத் தொடாதே! என்று கல்யாணி கூறிவிட்ட பிறகு இனிமேல் என் இஷ்டத்திற்கு நடப்பதை யார்தான் தடுக்க முடியும்? பழி வாங்கத்தான் பாகனேரி சம்பந்தத்திற்குச் சரி சொன்னேன். ஆனால் உன் அறிவுரையும், நான் கல்யாணி மீது ஆரம்பத்தில் கொண்டிருந்த காதலும் என் மனத்தை மாற்றின! அதற்குப் பிறகுகூட அவள் பிறகுகூட அவள் நம்மைச்