பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 349 'அக்கா! என் உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் சொல்லி விட்டேன். எந்த எந்த நிபந்தனையானாலும் கல்யாணி நாச்சியருக்காக நிறைவேற்றுகிறேன் என்று நீதான் சொன்னாய்! இப்போது அந்தப் பொறுப்பு உன்னிடம் விடப்பட்டிருக்கிறது. நீ என்ன சொன்னாலும் சரி! ஆனால் ஒன்று; என் நிபந்தனையை ஏற்றுக் கொள்ளாமல், "பட்டமங்கலத்து வைரமுத்தனை மட்டும் மறந்து விடடி வடிவு" என்று என்னை வற்புறுத்தாதே! என் வாழ்க்கையைப் பற்றியும் கொஞ்சம் யோசித்துப் பார். நான் உன்னைப் போல வாழ்க்கை யென்பது ஒரு புனித யாத்திரையென்று அதற்கு அதிக மதிப்புக் கொடுப்பவள் அல்ல. வாழ்க்கையை ஒரு உல்லாசப் பயணம் என்றுதான் கருதுகிறவள்! அந்தப் பயணத்தில் நான் விரும்பிய கப்பல் கிடைத்தால் சந்தோஷம்! அதில் ஏற்றிவிட வேண்டியவள் நீதான்! இல்லாவிட்டால் தற்போதைக்கு இந்த ஒடமே போதும் என்று திருப்தி அடைவேன். அதற்கும் நீ குறுக்கே நின்றால் என் சந்தோஷத்தைச் சாகடிக்கிறாய் என்றுதான் அதற்கு அர்த்தம்/ வடிவூ! வைரக் கம்மலைக் கழற்றிக் கொடு, முத்துச் சரத்தை எடுத்து என் கழுத்திலே போடு- இப்படியொரு பொருளையா கேட்கிறாய்-நான் கொடுத்து விட ! கம்மலையோ முத்தாரத்தையோ நீ கேட்டால் அவற்றின் அனுமதியின்றியே உன் கையில் தந்து விடுவேன்! நீ கேட்கும் பொருள் அதுவல்லவே! என் உயிரையே அல்லவா கேட்கிறாய்! ஆமாம் வடிவு! என் உயிர் வேறு, அவர் உயிர் வேறு-என்றல்ல அந்த உயிர் என்னை விட்டுப் பிரிந்தாலும் கூடு விட்டுக் கூடு பாய்ந்திட வணங்குமா என்பதை நான் எப்படியடி சொல்ல முடியும்?”