பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 371 அவன் குடித்த குடிக்கு இவ்வளவு நேரம் விழித்துக் கொண்டிருந்ததே பெரிய காரியம் நிறையக் குடித்து விட்டு வந்தான் என்பதினால்தான் அன்று வீரம்மாள் அவனைத் தனது அறைக்குள்ளே படுக்க. அனுமதிக்கவில்லை. கல்யாணியின் அறைக்குள்ளிருந்து சிறிய ஒலி கூடக் கேட்காதது வைரமுத்தனையும் திகைப்பில் ஆழ்த்தியது. கதவுகளின் இடுக்கின் வழியாகப் பார்த்தான்-வெளிச்சம் தெரிகிறதா அறைக்குள் என்று! தெரிந்து கொள்ள முடியவில்லை! காவல் வீரன் ஒருவனைக் கைதட்டி அழைத்துக் கதவுக்கு மேலே நிலைப்படியில் தாவி ஏறச் சொல்லி, சாளரத்தின் வழியாக விளக்கு எரிகிறதா, வெளிச்சமிருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான். அவன் ஆணைப்படி ஏறிப் பார்த்த அந்தக் காவல் வீரன், இல்லீங்க எஜமான்! ஒரே இருட்டா இருக்கு!" என்றான். 'விளக்கு எரியவில்லை" என்று வீரன் சொன்னது வீரம்மாளின் காதுகளில் விழுந்தது. ஒருவேளை விளக்கு அணைந்து போயிருக்குமா? வீரம்மாளின் உள்ளத்தில் இந்தக் கேள்வி எழுந்தது! அதற்குள் கல்யாணியின் அறைக் கதவை அதிவேகமாகவும், ஆத்திரத்துடனும், ஏதோ ஓர் ஆவலுடனும் வைரமுத்தன், தனது காலால் ஓங்கி உனத்தான். இரண்டு தடவை அவனது பலமிக்க உதைகளைத் தாங்கிக் கொண்ட அந்தக் கதவுகள், மூன்றாவது உதைக்குப் பணிந்து உடைந்து விழுந்தன! வெளிப்புறத் தூண் ஒன்றில் எரிந்து கொண்டிருந்த சிறிய தீப்பந்தத்தை வைரமுத்தன் கையில் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள்ளே பாய்ந்து சென்றான்.