பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தென்பாண்டிச் சிங்கம் 379 வண்டி செல்வதைப் பார்த்த வீரம்மாள் தனது அறைக்கு ஓடிச்சென்று அவசர அவசரமாக ஒரு கடிதம் எழுதினாள். அதைச் சுருட்டி, ஒரு வீரனிடம் கொடுத்து தை யாருக்கும் தெரியாமல் உடனே பாகனேரியில் கறுத்த ஆதப்பனிடம் சேர்த்துவிடு!" என்று கூறி அவனை விரட்டினாள். 8.4. கல்யாணி செல்லும் வண்டி பட்டமங்கலம் எல்லையைக் கடப்பதற்கு முன்பே, பட்டமங்கலத்துக் குதிரையொன்றில் ஒரு வீரன் அந்த வண்டியைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அவன் யாராக இருக்கும்? எங்கே போகிறான்? என்ற ஆராய்ச்சியில் இறங்காமலே, உறங்காப்புலி வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். மாடுகளை அவன் அதட்டி ஒட்டவில்லை. ஒருவேளை அவன் குரல் கல்யாணிக்குப் புரிந்து விட்டால் என்ன செய்வது என்பதற்காக, வாயைத் திறக்காமலே வண்டி மாடுகளைச் சாட்டையால் அடித்து விரட்டிக் கொண்டிருந்தான்/ அவனது மனைவி வீரம்மாள் கொடுத்த ஓலையை எடுத்துக் கொண்டுதான் அந்த வீரன் குதிரையில் ஓடிக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியாது. பட்டமங்கலம் எல்லை கடக்கும் வரையில் திடமாக வண்டியில் அமர்ந்திருந்த கல்யாணி, அந்த எல்லையை வண்டி கடந்தபோது கண் கலங்கினாள். அவளால் அடக்க முடியாத அளவுக்கு இனம் தெரியாத ஒரு துயரம் பீறிட்டு எழுந்தது. அம்மாவிடம் கோபித்துக் கொண்டு. 'இனிமேல் சாப்பிடவே மாட்டேன் போ' என்று கூறிவிட்டு, தாய் கெஞ்சக் கெஞ்சக் கோபத்தை அதிகமாக்கிக் கொண்டு அவளிடம் இரண்டு அடியும் வாங்கிக் கொண்டு படுத்துவிட்ட பிறகு, வயிறு பசியெடுத்துக்கிள்ள, அம்மா மறுபடியும் அருகே வந்து 'சாப்பிடு கண்ணே' யென்று கூற மாட்டாளா என எதிர்பார்த்துக் கொட்டை கொட்டையாக விழித்துக் கொண்டிருக்கும் குழந்தை, மறுபடியும் தாய் வந்து கூப்பிடும் போது கூட "வேண்டாம் போ சோறு'