பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

449 கென்பாண்டிச் சிங்கம் ஓ அதெல்லாம் கூடாது! யுத்த களத்தில் ஒருவர் முன் ஒருவர் தலை தாழ்த்தினாலே அதற்கு அர்த்தமே வேறாகி விடும்" என்று என்று வாளுக்குவேலி கூறிக் கொண்டே வைரமுத்தனைத் தழுவிக் கொண்டு, அவன் குனிந்து வாழ்த்துப் பெற முயன்றதைத் தடுத்து விட்டான். "போர்க் களத்தில் ஆண்கள்தான் ஒருவரையொருவர் வணங்கக் கூடாது! சரணாகதி என்றாகி விடும்! பெண்கள் ஆண்களை வணங்கலாம் வணங்கலாம் அல்லவா? கல்யாணி! நீ உன்னுடையவர் காலிலே விழு! நான் என்னுடையவர் காலிலே விழுகிறேன்! என்றாள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சுந்தராம்பாள். இருவரும் அவரவர்க்குரிய ஆடவராம் வைரமுத்தன், வாளுக்குவேலி இருவரின் கால்களில் விழுந்து வணங்கினர். "தம்பி, ஆதப்பா! உன்னிடம் கொடுத்தேனே, கல்யாணியின் தாலி/ பத்திரமாக இருக்கிறதா? கொடு இங்கே!" என்று கையை நீட்டினான் வாளுக்குவேலி! "இதோ இருக்கிறது அண்ணா" என்று ஆதப்பன் தன்னிடம் பாதுகாப்பாக இருந்த கல்யாணி நாச்சியாரின் தாலியை வாளுக்கு வேலியின் கையில் கொடுத்தான், அப்போது மேகநாதன் மிக வேகமாக ஒரு குதிரையில் வந்து இறங்கி, மூச்சுவிட முடியாமல் திணறி ஒரு ஓலையை வாளுக்கு வேலியிடம் அளித்தான். "என்ன மேகநாதா? என்ன விசேஷம்?" "மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர் கையில் சிக்கிவிட்டார்கள்! காளையார் கோயில் வெள்ளைக்காரர் வசமாகிவிட்டது! இதோ இந்த ஓலையில் எல்ல்ா விபரங்களையும் வெள்ளை அய்யர் எழுதி அனுப்பியிருக்கிறார். ஊமைத்துரை, கோபால நாயக்கர், மற்றும் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள்