பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கலைஞர் மு. கருணாநிதி தட்டுக்களில் உட்கார்ந்து கொண்டு உணவு மேசைக்கு ஊர்வலமாக வந்து சேர்ந்தன. பிகு, பிடிவாதம், மறுப்பு, இத்தனைக் கட்டங்களைத் தாண்டிப் பட்டமங்கலத்து வல்லத்தரையன் பாகனேரி மாளிகை வீட்டுக்குள் வந்து நுழைந்தான். வாளுக்கு வேலியும், கறுத்த ஆதப்பனும் வரவேற்று உணவுக் கூடத்திற்கு அழைத்து வந்தார்கள். அவனோடு வெள்ளை அய்யர் வந்ததைப் பார்த்து சமையற்கார காடையும் கௌதாரியும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டார்கள். "சாமி சைவமல்லவா? இதெல்லாம் சாப்பிடுவாரா?' உணவுக் கூடமோ ஒரு பெரிய யுத்தம் முடித்து அதற்கடுத்த நாளைப் போலக் காட்சி தருகிறது! வெள்ளை அய்யர் அதே உணவு மேசையில் தனக்குத் தனியாக ஒரு இலை போடச் சொன்னார்! சைவமிருந்தால் பரிமாறச் சொன்னார்! இல்லையேல் சோறு! அதற்குக் கொஞ்சம் மோர்/ முட்டை மாத்திரம் சாப்பிடலாம்; அதில் இறைச்சியோ எலும்போ கிடையாது! அதனால் அது சைவத்தில் சேருகிறது என்பது அவர் வாதம். எதிர்பார்க்கப்படுகிற அந்த உருவம் இன்னும் உணவுக் கூடத்தில் நுழையவில்லையே! இப்படியொரு ஏக்க உணர்வோடு இரண்டு விழிகள் எங்கோ ஒரு மூலையில் இருந்து அலைந்து கொண்டிருக்கின்றன. வல்லத்தரையனை உட்கார வைத்துவிட்டு வெளியே சென்ற தனது அண்ணன் கறுத்த ஆதப்பன். வைரமுத்தனோடு தான் உள்ளே வருவான் என்ற எதிர்பார்ப்பு இதயத்தை என்னமோ செய்தது கல்யாணிக்கு ஒரு நாள் சந்திப்புதான்! அதுவும் காலையிலே சந்தித்ததுதான்! ஆனால் அவனது திறமை, வலிமை, இயல்புகளைப் பற்றித் தனது அண்ணனைப் போலவே பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். அந்த இனிய