பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்மொழி 25



உலகக் கடல்களிலேயே அதிக அளவுக்குப் பலவகை உயிர் பொருள்கள் உள்ள கடல் இது. இதன் மீன் வளமும் கனி வளமும் உப்பு வளமும் அளவிடற்கரியன. இதன் கடற்கரைப் பகுதிகளில் அஞ்சத்தக்க நோய்கள் வருவதாலும், கொடிய விலங்குகள் உள்ளமையாலும் மக்கள் வாழ்விற்கு அவை ஏற்றனவல்ல. மேலும், பெரிய அலை எழுச்சிகளும், வலிவான காற்றும் கரைப் பகுதிகளை ஆட்கொண்டுள்ளன. இக்கடலை வெப்பக் கடல் என்றும் கூறலாம். இதன் மேற்பரப்பின் வெப்பம் 90 பாகை வரை உயர்கின்றது. உலக வாணிகத்திற்கு இக்கடல் வழி பெரிதும் துணையாக அமைந்தள்ளது. சிங்கப்பூர், பம்பாய், கொழும்பு, சென்னை முதலிய முதன்மையான துறைமுகங்கள் இதன் கரைகளில் உள்ளன. அரபிக் கடலும் வங்காள விரிகுடாவும் இதன் துணைக் கடல்களாகும்.
இக்கடல்பற்றி மேலும் பல விரியான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. முதன் முதலாக 1881-ஆம் ஆண்டு இதனை ஆராயத் தொடங்கினர். பொதுவாகக் கடல் ஆராய்ச்சி மிகவும் பயன் விளைப்பதாகும். உலகில் உள்ள 45 நாடுகள் நியூயார்க்கில் ஒன்றாகக்கூடி 1959-ஆம் ஆண்டில் உலகக் கடல் ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொண்டன. இதன் திட்டத்திற்கு ஏறத்தாழ 61/2கோடி உரூபா செலவாகும். இச் செலவை எல்லா நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இவ்வாராய்ச்சியை 40 கப்பல்களும். 350 அறிவியலறிஞரும் மேற்கொள்வர். முதன் முதல் இல்வாராய்ச்சி இந்தியப் பெருங்கடலில் நடத்தப் பெறும். கடல் ஆராய்ச்சியால் நிலவியலறிவு, கடல்நூலறிவு, வானிலையறிவு, நீரியலறிவு, உயிரியல் அறிவு முதலியவை பெருகும்.
இந்தியக் கடலின் பாதி அளவுக்குக்கூட உயிரியல் ஆராய்ச்சி இன்னும் நடைபெறவில்லை. இக் கடலில் சில இடங்களில் மீன்கள் மிகுதியான அளவுக்கு இறந்து மிதக்கின்றன. 1957-ஆம் ஆண்டு இக்கடல் வழியாகச் சென்ற உருசியக் கப்பல் ஒன்று கொழும்புக்கும் ஏடன் குடா நீரோட்டத்திற்கும் இடையே பல இலக்கக் கணக்கான டன்கள் அளவில் மீன்கள் மடித்து மிதந்ததைக்கண்டது. 650 கற்கள் நீளமும், 140 கற்கள் அகலமும் உள்ள மேற்பரப்பு முழுதும் மீன்கள் மிதந்ததை அக் கப்பல் கண்டது. முறையான கடல் ஆராய்ச்சியால் இவ்வகைச் சிக்கலுக்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்கும்.
2. பசிபிக் பெருங் கடல்.
இது முட்டை வ்டிவமான கடல். 8 கோடி கற்பெருக்கம் உள்ளது. அட்லாண்டிக் கடலைவிட இரு மடங்கு பெரியது. கிழக்கிலிருந்து மேற்கே இதன் நீளம் 12,000 கற்கள். வடக்கிலிருந்து தெற்கே நீளம் 10,000 கற்கள். இதன் கரைகள் ஒழுங்