பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. ண்டும் உரையாசிரியர்கள் எடுத்தோ திடக் காண்கின்றா மன்றி நூன்முழுதும் வழங்கக் கண்டிலம். (தி-பி-கை). வளையாபதி. இதில் ஒவ்வோர் கூறு மேற்கோளாய் முன்னோருரை களில் வந்திடக் காண்கின்றாமன்றி நான் முழுதும் வழங் கக் கண்டிலம். (தி-பி-கை). சூளாமணி. இது சைன காவியம். தோலாமொழித் தேவரியற்றி யது. இக்காவியத்தலைவன் பயாபதி. இவன் சங்கவண் ணன் மேகவண்ணனென்னும் புத்திர ரிருவரைப் பயந்த வரலாறும், இவருளையோனான திவிட்டனென்னு மேக வண்ணன் மாயச்சீயத்தை வதை செய்த பராக்கிரம வர லாறும், இரத நூ புரவிஞ்சையர் வேந்தன் மகள் சயம்ப வை யென்னும் பொற்கொடியை வேட்ட வரலாறும், அவன் அச்சுவகண்டன் முதலிய பகைமன்னரைப் போரி லடர்ந்து வென்றிமாலை சூடிய வரலாறும், தன் மகட்குச் சுயம்வர நாட்டிய வரலாறும், பயாபதி நிலையாமை நோக்கி யரசுரிமை துறந்து அருகனறநெறி தேர்ந்த வரலாறும், அருக்சரணாகதி யெய்திய வரலாறும், இது மீக் கூறும். (தி-பி-கை). திருவள்ளுவரும் திருக்குறளும். இவர் பிரம்மதேவருடைய அமிசாவதாரமாகப் பகவ னாரென்பவருக்கு ஆதியென்பவள் வயிற்றிலே பிறந்து மையிலாப்பூரிலே ஒரு வள்ளுவன் மனை யில் வளர்ந்து