பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தென்மொழி வரலாறு. வேத சாஸ்திர நிபுணராகி, அவற்றின் சாரமாய் திருக் குறளைப் பாடிச் சங்கப் பலகையேறி அரங்கேற்றினவர். கபிலரகவலின்படி கபிலர் ஒளவை முதலாயினோர் இவர்க் குச் சகோதரர். இவ்வள்ளுவருக்குச் சங்கத்தார் சமா சனங் கொடுக்கப் பின்வாங்கின ரென்பதும் பின்னர் அச ரீரி வாக்காலுடன்பட்டன ரென்பதும் "திருத்தகு தெய் வத் திருவள்ளுவரோ -டுருத்தகு நற்பலகை யொக்க - விருக்க-வுருத்திரசன் மர்... என்னும் வெண்பாவாற்கொ ள்ளப்படும். திருவள்ளுவர் தாமே யெல்லாமோதி யுணர்ந் தவர். அவர் பிறர் எவரிடத்துங் கல்லாதவர். இவ்வுண் மை நக்கீரர் கூறிய "தானே முழுதுணர்ந்து" என்னும் வெண்பாவாற் பெறப்படும். இவர் திருக்குறளைக்கொண்டு போய்ச் சங்கத்தி லரங்கேற்றிய காலத்தில் அரசு வீற் றிருந்த பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. திருக்குறளுக் குப் பாமாலை சூட்டினோர் ஐம்பதோடைவருள் உக்கிரப் பெருவழுதியு மொருவன். திருவள்ளுவர் செய்த நூல் வைதிக சமயத்தினரால் மாத்திரமன்று, உலகத்துச் சம யிகள் யாவராலும் மெய் நூலெனக் கொண்டு மெச்சித் தலைவணங்கப்படும் நூலென்பது, கல்லாடர் "எப்பாலவ ருமியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி எனக் கூறியிருத்தலின், அக்காலத்தவர்களுக்கு மொத்த துணிபாம். வள்ளுவர் நூலிலே யாவர்க்கு மங்கீகாரமா கிய பொருட்சிறப்பும் இலக்கிய விலக்கண வனப்பு மமை ந்து கிடத்தலினால் வள்ளுவர் காலத்திலேயே அது பிர மாண நூலாகத் தொடங்கிவிட்டது. மலைவுவரு மிடங்க டோறும் இது வள்ளுவன் மொழியென்றால் அவ்வளவில் மலைவு நீங்கிவிடும். கண்ணு தல் கவியிலுங் குற்றங்கற்பித்த நக்கீரரே தமது இறையனாரகப் பொருளுரையிலே குற 'ளைப் பிரமாணமாக எடுத்தாண்டு போயினரென்றால் மற் றோர் கொள்வது புதுமையாகாது. சேரமான் பெருமா