பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தேன்மொழி வரலாறு. இன்பம் வேண்டியவிடத்தும் அவர் பாடிய பதிகங்களெல் லாம் அப்போது அவர்க்குச்சுவார்த்தமேயானாலும் அவை உற்றுநோக்குமிடத்துப் பரார்த்தமேயாம். ஆதலால் இப் பதிகங்களெல்லாம் தனித்தனி யொவ்வோர் பயன் குறித் தனவாய் உலகமுய்யுமாறு பரோபகாரமாக அருளிச்செய் யப்பட்டனவாம். அவை இசையறிந்து பண்ணோடமைத் துமெய்யன்புடையராகி யோதுமிடத்துத் தப்பாமல் அவ் வப்பயனைத் தருவனவாகும். ஆழ்வார்கள். தமிழ் மாதுக்குத் தேவாரங்கள் பாடியருளி அலங் காரமான பூஷணங்கள் புனைந்தவர்கள் சைவசமயாசாரி யர்கள் மாத்திரம் அல்லர், திருவாய்மொழி பாடியருளிய ஆழ்வார்களும் புனைந்தவராவர். அவர்கள் பன்னிருவர். அவர்களுள் மூவர் மிகச்சிறந்த ஞானிகள். அம்மூவரை யும் வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தில், வரந்தருவார். "பாவருந்தமிழாற் பேர்பெறு பனுவற்பாவலர் பாதிநாளி ரவின், மூவருநெருக்கிமொழி விளக்கேற்றிமுகுந்தனைத் தொழுத நன்னாடு, - தேவருமறையுமின்ன முங்காணாச்செ ஞ்சடைக் கடவுளைப்பாடி, - யாவருமதித்தோர் மூவரிலிரு வர்பிறந்தநாடிந்த நன்னாடு என்று எடுத்துப் பாராட்டுவர். மூவராவர் பொய்கையாழ் வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்னும் இவர். இவ ருள் முந்தினவர் காஞ்சீபுரத்திலும் நடுநின்றவர் மகாவலி புரத்திலும் மற்றையவர் மைலாப்பூரிலும் அவதரித்தவர். இம்மூவரும் திருக்கோவலூரில் விஷ்ணு தரிசனஞ்செய்து கொண்டு ஒருவர் பின்னொருவராய் மீழ்வாராயினர். அப் பொழுது காரிருள் மூடி ஒரு மழை பொழிந்தது. பொய் கையாழ்வார் ஒரு மடத்தில் ஒருசிற்றறையில் ஒதுக்கிடந்